அறிவியல் படிப்புகளுக்கு ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,
நாட்டின் அறிவியல் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், சமுதாயத்தில் நிலவும் தொழில்நுட்ப சவால்களுக்கு தீர்வு காணும் வகையிலும் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அங்கீகாரத்துடன் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜூகேஷன் அண்ட் ரிசர்ச்'.இந்நிறுவனத்தின் கல்வி வளாகங்கள் பெர்காம்பூர், போபால், கொல்கத்தா, மொகாலி, புனே, திருவனந்தபுரம் மற்றும் திருப்பதி ஆகிய 7 நகரங்களி செயல்படுகின்றன.வழங்கப்படும் படிப்புகள்* பி.எஸ்., - 4 ஆண்டுகள்* பி.எஸ்-எம்.எஸ்., (இரட்டை பட்டப்படிப்பு) - 5 ஆண்டுகள்இவைதவிர,கொல்கத்தாவில் பி.எஸ்-எம்.எஸ்., - கம்ப்யூடேஷனல் அண்டு டேட்டா சயின்ஸ் படிப்பும், மொகாலியில் வழக்கமான 5 ஆண்டு பி.எஸ்-எம்.எஸ்., படிப்பில் புவியியலில் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியவை முதன்மை பாடங்களாக வழங்கப்படுகின்றன. திருப்பதி வளாகத்தில் 4 ஆண்டு பி.எஸ்.,-பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் அறிவியல் வழங்கப்படுகிறது.மேலும், போபால் வளாகத்தில் 4 ஆண்டு பி.எஸ்.,-பொருளாதார அறிவியல் படிப்பு மற்றும் 4 ஆண்டு பி.டெக்.,-கெமிக்கல் இன்ஜினியரிங், பி.டெக்.,-எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் அண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.டெக்.,-டேட்டா சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.மொத்த மாணவர் சேர்க்கை இடங்கள்: 2343பாடத்திட்டம்: பொதுவாக, 5 ஆண்டுகள் கொண்ட பி.எஸ் - எம்.எஸ்., படிப்பில், முதல் இரண்டு ஆண்டில், அறிவியல் பாடப்பிரிவில் உள்ள அடிப்படை அறிவியல் நுணுக்கங்கள் கற்று தரப்படுகிறது. மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டில், அறிவியல் துறையில் உள்ள ஏதேனும் ஒரு பாடப்பிரிவை முதன்மை படிப்பாக தேர்வு செய்து மாணவர்கள் படிக்கலாம். ஐந்தாம் ஆண்டு முழுவதும் முழுநேர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.கல்வித் தகுதி: பிளஸ் 2வில் அறிவியல் பாடங்களை பயின்று குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். சில படிப்புகளுக்கு கணிதப் பாடத்தை படித்திருப்பது அவசியம்.சேர்க்கை முறை: ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., நடத்தும் ஐ.ஏ.டி., எனும் ஆப்டிடியூட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 13, 2026ஐ.ஏ.டி., தேர்வு நாள்: ஜூன் 7, 2026விபரங்களுக்கு: www.iiseradmission.in