அறிவுசார் மேம்பாடே, இன்றையத் தேவை!
ஒருவர் கல்வியின் மூலமாக அறிவைப் பெற்றுக் கொள்கிறார். அறிவு மற்றும் கற்பித்தல் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில்தான், சமூகத்தின் மாற்றம் நிகழ்கிறது. கல்வி மற்றும் அறிவு ஆகியவற்றுக்கிடையில் பெருமளவிலான வேறுபாடுகள் உண்டு. "கல்வி என்பது ஒரு சமூகத்தின் ஆன்மா, அது ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கடந்து செல்கிறது" என்பது ஒரு புகழ்பெற்ற பழமொழி. கல்வி என்பது, அறிவைப் பெறுவதற்காகவும், திறன்களை வளர்த்துக் கொள்வதற்காகவும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றில் பின்பற்றப்படும் கற்பித்தல், பயிற்சியளித்தல் மற்றும் கற்றல் செயல்பாடு ஆகும். அறிவு என்பது, ஒருவர் பயன்பாட்டிற்காகப் பெறக்கூடிய தகவல், புரிந்துணர்வு மற்றும் பயன்படுத்தத்தக்க திறன் ஆகும். இந்நாடு, தகவல்சார் சமூகம் என்ற நிலையிலிருந்து, அறிவுசார் சமூகம் என்ற நிலைக்கு மாறும் முயற்சியில் இருப்பதால், அறிவு என்பதன் தொந்தரவற்ற முன்னேற்றம், நிலை மாற்றம் மற்றும் கூட்டிணைவு போன்றவை, கல்வித் திட்டத்தை பெருமளவில் மாற்றியமைப்பதன் மூலமாக பெறப்பட வேண்டும். நமது நாட்டின் படித்த மனிதவளத்தின், தேவை - அளிப்பு ஆகியவற்றுக்கிடையேயான வித்தியாசம், தோரயமாக 1 கோடி என்ற அளவிலும், அதனையும்விட அதிகமாக வளர்ந்து வருவதாகவும் உள்ளது என்று தகவல்களை கூறுகின்றன. துரதிருஷ்டவசமாக, நாம் மிகவும் அதரப் பழசான, தேர்வுமுறையிலான கல்வித் திட்டத்தை வைத்திருக்கிறோம். கல்லூரிகளும், பல்கலைகளும், ஆராய்ச்சி செயல்பாடுகளின் மூலமாக, அறிவை வளர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நடைமுறை நிகழ்வுகளோ, வேறுவிதமாக உள்ளன. இந்தியாவிலுள்ள, அனைத்து ஐஐடி-களும் வருடத்திற்கு 500 முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ளும் நிலையில், நாட்டின் 300க்கும் மேற்பட்ட பல்கலைகள் உள்பட, பிற உயர்கல்வி நிறுவனங்கள் 4500 முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன. ஆனால், இதைவிட 10 மடங்கு ஆராய்ச்சியாளர்கள், சீனாவிலுள்ள 1000 பல்கலைகளில் உருவாகிறார்கள். இதேநிலை நீடித்தால், அடுத்த 20 ஆண்டுகளில், சீனா அமெரிக்காவை விஞ்சி, உலகின் உயர்கல்வி மையமாக வளர்ந்துவிடும். உலகளவில் உட்சபட்ச விதிமுறைகள்(9.16/10) கொண்ட நாடாக இந்தியா இருப்பதாக, சில சர்வேக்கள் கூறினாலும், இந்தியாவானது, அறிவுப் பொருளாதாரமாகவும், அறிவுசார் பொருளாதாரமாகவும் கருதப்படுகிறது. எங்கு, கல்வி நிறுவனங்கள் அறிவுதளத்தை உருவாக்கும் விருப்பத்தில் உள்ளனவோ, அங்கே, தொழில் நிறுவனங்களும், தங்களுடைய சொந்த அறிவு வளத்தை வெற்றிகரமாக ஏற்படுத்திக் கொள்கின்றன. நமது அறிவுப் பொருளாதாரத்தில், இந்த அறிவானது ஒரு தயாரிப்பாக இருக்கும்போது, அந்த தயாரிப்பை ஒரு மேம்பாட்டு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் அதுவே அறிவு அடிப்படையிலான பொருளாதாரம். இந்த அமைப்புரீதியிலான அறிவானது, பின்னர், போட்டிக்கான ஆதார பலத்தை வழங்குகிறது. அறிவு என்பது வெளிப்படையாக கூறப்படுவது மற்றும் குறிப்பால் உணர்த்தப்படுவது (Tacit & Explicit) என்று இருவகைப்படும். Tacit அறிவு என்பது, உள்ளுணர்வான, தனிப்பட்ட மற்றும் சூழல் தொடர்பானது அதேசமயம், வெளிப்படுத்த கடினமாக ஒன்று. இந்தவகை அறிவு, உணர்திறன் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 2 பரிமாணங்களைக் கொண்டது. தொழில்நுட்ப பரிமாணம் என்பது முற்றிலும் பெளதீக(Physical) அனுபவம் சார்ந்தது, உணர்திறன் பரிமாணமோ, மதிப்பீடுகள், நம்பிக்கைகள், உணர்ச்சிகள் மற்றும் கணிப்புகள் சார்ந்தது. தெளிவாகத் தெரிவிக்கப்படுகிற அறிவு(Explicit) என்பது வார்த்தைகளால் விளக்கப்படக் கூடியது மற்றும் தரவாக சேமிக்கப்படக்கூடியது. இந்த Explicit அறிவை மாற்றுதல் அல்லது விவாதித்தல் என்ற நிலைக்கும் செல்லும் முன்பாக, அதன் உருவாக்கத்தை அறிந்து கொள்வது அவசியம். அறிவு என்பது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு மட்டுமே உரித்தானது என்ற எண்ணம் தவறு. ஒவ்வொரு துறையுமே தனக்கான அறிவுத் தளத்தை வைத்துள்ளது. ஒவ்வொரு பொருளும், தனது அனைத்து உணர்திறன்களுடன், அறிவு சுழற்சி எனும் செயல்பாட்டிற்கு ஆளாகிறது. அந்த செயல்பாட்டின் சம்பவங்கள் தரவுகளாக சேமிக்கப்பட்டு தகவல்களாக ஆகின்றன. இந்த தகவல்களைத்தான், முடிவில், அறிவு என்று நாம் அழைக்கின்றோம். இந்தப் பொருட்கள், அனுபவம், பிரதிபலிப்பு, கருத்தாக்கம் மற்றும் இறுதியாக செய்முறை ஆகிய செயல்பாடுகளின் வழியாக வந்து, குறிப்பிட்ட கற்றல் சுழற்சியாக மாறுகின்றன. அறிவு மற்றும் கற்றல் சுழற்சிகள் பொது மையத்தை உடையவை. எனவே, ஒரு நிறுவனம் அறிவு அடிப்படையிலானதாக மாறவேண்டுமானால், அந்த இரண்டும் சமமாக நகர வேண்டும். "அறிதல் மட்டுமே போதுமானதன்று. அதுபோல விருப்பம் மட்டும் போதுமானதன்று. செயல்படுதல் மிகவும் அவசியம்" என்று ஒரு பொன்மொழி உண்டு. ஒரு நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட, Tacit மற்றும் Explicit ஆகிய 2 அறிவு நிலைகளையும் கட்டமைத்து, ஒன்றை, இன்னொன்றாக மாற்றுவதை உறுதி செய்வது அவசியம். இந்த இடத்தில் "அறிவுப் பணியாளர்கள்" என்ற கருத்தாக்கம் பற்றி பார்க்க வேண்டியுள்ளது. புதிய பொருட்கள் மற்றும் சேவைகளை உருவாக்கி, நுகர்வோருக்கு பயனைத் தர, பணியாளர்கள், தங்களது அறிவைப் பயன்படுத்துகின்றனர். வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பமானது, இந்த செயல்பாட்டை எளிதாக்கியுள்ளது. மேலும், ஊழியர்களின் பணி விலகல் அதிகமாக இருக்கும் காலகட்டத்தை சமாளிக்க, இந்த தொழில்நுட்ப வளர்ச்சி கை கொடுக்கிறது. அறிவின் மாற்றம் அல்லது இணைப்பு செயல்பாடுகள், பணியாளர்களை சமூகப் படுத்துதல், எண்ணங்களை இணைத்தல் போன்றவை HR தலையீடுகளின் மூலம்தான் நடைபெறும். நடக்கும் நிகழ்வுகளை கவனித்தல் மற்றும் படித்தல் மூலமாகவே ஒரு பணியாளர் தனது அறிவை மேம்படுத்த முடியும். சாத்தியப்படும் வழிமுறைகளின் மூலமாக, Explicit அறிவை விரிவான முறையில் பகிர்ந்து கொள்வதன் மூலமாகவும் இதை அடையலாம். மைக்ரோசாப்ட் நிறுவனமானது, அறிவை வளர்க்க மற்றும் இடமாற்றி சிறப்பான நிலையை அடைய, தனது சொந்த முயற்சியில் ஒரு செயல்முறையை உருவாக்கியுள்ளது என்று நம்பப்படுகிறது. அதேசமயம், இன்போசிஸ் நிறுவனம், அதனுடைய அறிவுசார் மூலதனத்தை மதிப்பாய்வு செய்யும் செயல்பாட்டில், ஒரு படி முன்னே சென்று, அதனுடைய Invoice -ல் குறிக்கிறது. அறிவை உருவாக்குதல் மற்றும் பரப்புதல் என்பது மிகவும் முக்கியமான ஒரு அம்சம் என்பதால், பல நிறுவனங்களில், Knowledge officer இருந்து, அறிவுசார் சூழ்நிலையை உருவாக்கி, தகவல் செறிவு அதிகமாவதை உறுதிசெய்யும் பணியை மேற்கொள்கிறார். மேலும், அறிவானது, வாடிக்கையாளர்களிடமிருந்தும் வரும் என்பதால், அவர்களின் Feedback கேட்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. ஒரு நிறுவனத்தில், அறிவை உருவாக்குதல் மற்றும் பரப்புதல் செயல்பாட்டில் HR பங்கு மிக முக்கியமானது. அதேபோன்று, கல்வி கற்ற தோழமை குழுக்களும், இந்த முயற்சியை முன்னெடுத்துச் சென்று, மேம்பட்ட பொருளாதாரம் என்ற லட்சியத்தை அடைவதை உறுதிசெய்ய வேண்டும்.