உள்ளூர் செய்திகள்

டெக்ஸ்டைல் இன்ஜி., படிக்கலாமா?

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் இன்றைய காலத்தில், டெக்ஸ்டைல் இன்ஜினியரிங், பலராலும் விரும்பப்படும் துறையாக இருக்கிறது. நிட்டட், பாலியெஸ்டர், காட்டன், சில்க் ஆகிய டெக்ஸ்டைல் வார்த்தைகளை அன்றாடம் பயன்படுத்துகிறோம். இவற்றை உருவாக்கும் தொழில் நுட்பம்தான் டெக்ஸ்டைல் இன்ஜினியரிங். இந்தியாவில் பல கோடி பேருக்கு, டெக்ஸ்டைல் துறை வேலை வாய்ப்பு தந்திருக்கிறது. இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒருமுறை மாறுகிறது. டெக்ஸ்டைல் இன்ஜினியரிங்கும், பேஷன் டெக்னாலஜியும் பிரபலமானவை. கெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், கம்ப்யூட்டர், எலக்ட் ரானிக்ஸ், மெக்கானிகல் இன்ஜினியரிங் துறைகளின் பயன்பாட்டை, டெக்ஸ்டைல் இன்ஜி., துறை அதிகம் எடுத்துக் கொள்கிறது. ஸ்பின்னிங், வீவிங், கார்மென்ட் மேனுபாக்சரிங், டெக்ஸ்டைல் மெஷினரி மேனுபாக்சரிங், விற்பனை மற்றும் சேவை, குவாலிட்டி கன்ட்ரோல் என டெக்ஸ்டைல் டெக்னாலஜி பல பிரிவுகளை கொண்டிருக்கிறது. இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் டிசைன்ஸ், கெமிக்கல் பிராஷசிங், மெஷின் டிசைன், டெக்ஸ்டைல் புராடக்ட் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகள் பாடத் திட்டத்தில் இருக்கும். மேலும் மேனேஜ்மென்ட், கம்ப்யூட்டர்ஸ், அக்கவுன்டிங் போன்றவற்றையும் படிக்க வேண்டும். பன்னாட்டு ஸ்டைல், பேஷன், மார்க்கெட் டிரெண்ட் ஆகியவை மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்படுகின்றன. வேலை வாய்ப்புகள் காட்டன் யார்ன் தயாரிக்கும் கழகங்கள், ஆய்வகங்கள், குவாலிட்டி கன்ட்ரோல், அக்ரோ டெக்ஸ்டைல், மெடிக்கல் டெக்ஸ்டைல், ஸ்பின்னிங் மில் போன்றவற்றில் எண்ணற்ற டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் தேவைகள் இருக்கின்றன. சுயமாக நிட்வேர் தயாரிப்பதிலும் இப்படிப்பை முடிப்பவர்கள் ஈடுபடலாம். சைசிங் யூனிட், டெக்ஸ்டரிங் யூனிட், பிராசஸ் ஹவுஸ், பினிசிங் யூனிட் போன்றவற்றையும் சுயமாக தொடங்கலாம். இப்படிப்பை முடிப்பவருக்கு தொடக்க சம்பளம், நிறுவனங்களைப் பொறுத்து, மாதம் ரூபாய் 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை தரப்படுகிறது. திறமையானவர்களுக்கு, தொடக்க சம்பளமே ரூபாய் 20 ஆயிரம் வரை தரப்படுகிறது. சில முக்கிய கல்வி நிறுவனங்கள் * Indian Institute of Technology, New Delhi.* Sasmira The Synthetic and Art Silk Mills ResearchAssociation, Mumbai.* Technological Institute OfTextiles, Haryana* PSG College of Technology, Coimbatore* MS University Departmentof Technology and Engineering, Baroda* L D College Of Engineering, Ahmedabad


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !