உள்ளூர் செய்திகள்

நியூக்ளியர் சயின்ஸ் படிக்க விருப்பமா?

இந்தியாவில் அணுசக்தி தொழில்நுட்ப ஆய்வுகளும், தொழில் ரீதியான பயன்பாடுகளும் அதிகரித்து வருகின்றன. இதை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் எம்.டெக்., நியூக்ளியர் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி படிப்பு வழங்கப்படுகிறது. பல்வேறு துறைகளிலும், அணு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவம், விவசாயம், தொழிற்சாலை, தொல்பொருள் ஆய்வு என பெரும்பாலான துறைகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில், இது முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறை வல்லுனர்களின் தேவை அதிகமாக உள்ளது.  நியூக்ளியர் சயின்ஸ் எம்.டெக்., படிப்பு, அணு தொழில் நுட்பத்தை பற்றிய முழுத்திறனை வழங்குகிறது. இந்த படிப்பில் பாதுகாப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கதிரியக்க பொருட்களை கையாள தேவையான அனுபவத்தையும், நம்பிக்கையையும் வழங்குகிறது. இயற்பியலில் பட்டம் பெற்றவர்கள், டில்லி பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., நியூக்ளியர் சயின்ஸ் அண்டு டெக்னாலஜியில் சேர முடியும். இதற்கு ஐ.ஐ.டி.,களால் எம்.எஸ்சி., சேர்க்கைக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். ஐ.ஐ.டி., போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டுமெனில், இயற் பியலில் முதுநிலை படிப்பை நிறைவு செய்து விட்டு, கேட் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அமிதி பல்கலைக்கழகம் பி.டெக்., மற்றும் எம்.டெக்.,கில் இப்படிப்பை வழங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !