துபாயில் உயர்கல்வி!
வணிகம், கட்டுமானம், பொருளாதாரம் போன்றவற்றில், குறுகிய காலத்தில் பிராமாண்ட வளர்ச்சி அடைந்துள்ள துபாய், உயர்கல்வியிலும் சர்வதேச அளவில் கால்பதித்துள்ளது! முக்கிய படிப்புகள்எம்.பி.ஏ., போன்ற மேலாண்மை பட்டப்படிப்பில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு ஏற்ற இடம் துபாய். பொறியியல், கணக்கியல், நிதி மற்றும் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கும் துபாய் சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. இங்கு, ஆராய்ச்சி அடிப்படையிலான கல்வி முறை பின்பற்றப்படுவதால், படித்து முடித்தவுடன் மாணவர்கள் எளிதில் வேலைவாய்ப்பை பெற முடிகிறது. சிறந்த பல்கலைக்கழகங்கள்அமெரிக்கன் யூனிவர்சிட்டி துபாய், சயீத் யுனிவர்சிட்டி, ஹையர் காலேஜ் ஆப் டெக்னாலஜி, யூனிவர்சிட்டி ஆப் துபாய் மற்றும் முர்டோக் யூனிவர்சிட்டி உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் தனித்துவமான பட்டப்படிப்புகளை வழங்குகின்றன. பி-ஸ்கூல்லண்டன் பிசினஸ் ஸ்கூல், மான்செஸ்டர் பிசினஸ் ஸ்கூல், காஸ் பிசினஸ் ஸ்கூல், ஹல்ட் இன்டர்நேஷனல் பிசினஸ் ஸ்கூல் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் சிறப்பான மேலாண்மை பட்டப்படிப்பை வழங்குகின்றன. மாணவர் சேர்க்கை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள், டோபல் அல்லது ஐ.இ.எல்.டி.எஸ்., போன்ற ஏதேனும் ஒரு ஆங்கில மொழி புலமைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ., பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், ஜிமேட் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம். தேவைப்படும் பட்சத்தில் மாணவர்கள் பரிந்துரை கடிதம் மற்றும் சி.ஆர்.இ., மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். உதவித்தொகைகல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகைகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால், ஏதேனும் ஒரு உதவித்தொகையை மட்டுமே அவர்கள் பெற முடியும். பெரும்பாலும் ‘மெரிட்’ அடிப்படையிலேயே உதவித்தொகைகள் வழங்கப்படுவதால், கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். வேலைவாய்ப்புவர்த்தக மையமாக உருவெடுத்துள்ள துபாயில், வேலைவாய்ப்புகள் அதிக அளவில் கொட்டிக்கிடக்கின்றன. போதிய கல்வித் தகுதியை பெற்ற, திறன் படைத்த மாணவர்களுக்கு அதிக சம்பளத்துடன் வேலை கிடைப்பது எளிது!