டில்லி பல்கலைக்கழகம்: சிறந்த கல்வி நிறுவனம்
டில்லி பல்கலைக்கழகம் 1922ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது டில்லியில் செயல்பட்டு வந்த செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி, இந்து கல்லூரி, ரம்ஜாஸ் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளும் இந்த பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. மூன்று கல்லூரிகளுடன், கலை மற்றும் அறிவியல் ஆகிய இரண்டு பிரிவுகளுடன், 750 மாணவர்களுடன் இந்த பல்கலைழக்கழகம் இயங்கத்தொடங்கியது. கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக இது வளர்ச்சியடைந்துள்ளது. தற்போது 14 பிரிவுகளில், 86 துறைகளுடன் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. 79 கல்லூரிகளுடன் ஏறத்தாழ 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் டில்லி பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், பொருளாதாரம், சோஷியாலஜி ஆகிய இந்த ஆறு துறைகளும் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி பிரிவில் சிறப்பு மையங்களாக திகழ்கின்றன. தற்போது இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமாகவும், முக்கிய பல்கலைக்கழகமாகவும் டில்லி பல்கலைக்கழகம் திகழ்கிறது. டில்லி பல்கலைக்கழகத்தின் துறைகள் கலைப்பிரிவு- அரபிக்- ஆங்கிலம்- பவுத்த சமயம்- ஜெர்மன்- இந்தி - லைப்ரரி அண்டு இன்பர்மேஷன் சயின்ஸ்- மொழியியல்- மாடர்ன் இந்தியன் லாங்குவேஜஸ் அண்டு லிடரரி ஸ்டடீஸ்- பெர்ஷியன்- பிலாசபி- பொலிட்டிக்கல் சயின்ஸ்- சைக்காலஜி- பஞ்சாபி- உருது- சமஸ்கிருதம் ஹியுமானிட்டீஸ் பிரிவு- வணிக பொருளாதாரம்- ஸ்லேவானிக் அண்டு உக்ரேரியன் ஸ்டடீஸ் அப்ளைடு சயின்ஸ் பிரிவு- பயோபிசிக்ஸ்- பயோகெமிஸ்ட்ரி- எலக்ட்ரானிக் சயின்ஸ்- ஜெனிட்டிக்ஸ்- மைக்ரோபயாலஜி- பிசிக்கல் எஜுகேஷன்- பிளான்ட் மாலிக்குலர் பயாலஜி மேதமெடிக்கல் சயின்சஸ் பிரிவு- கம்ப்யூட்டர் சயின்ஸ்- மேதமெடிக்ஸ்- ஆபரேஷனல் ரிசர்ச்- புள்ளியியல் மருத்துவ அறிவியல் பிரிவு- அனஸ்தீசியாலஜி அண்டு கிரிட்டிக்கல் கேர்- அனாடமி- கம்யூனிட்டி மெடிசின்- டெர்மடாலஜி அண்டு வெனராலஜி- பாரன்சிக் மெடிசின்- மெடிக்கல் பயோகெமிஸ்ட்ரி- மெடிக்கல் மைக்ரோபயாலஜி- மெடிசின்- ஆப்ஸ்டெட்ரிக்ஸ் அண்டு கைனகாலஜி- ஆப்தமாலஜி- ஆர்தோபேடிக்ஸ்- ஆடோலாரிங்காலஜி- பீடியாட்ரிக்ஸ்- பேத்தாலஜி- பார்மகாலஜி- பிசியாலஜி- சைக்கியாட்ரி- ரேடியாலஜி- ரேடியோதெரபி- ரேடியோடயக்னாசிஸ்- சர்ஜரி- டியூபர்குளோசிஸ் அண்டு ரெஸ்பிரேடரி டிசிசஸ் அறிவியல் பிரிவு- ஆந்ரபாலஜி- தாவரவியல்- வேதியியல்- என்விரான்மென்டல் ஸ்டடீஸ்- ஜியாலஜி- நர்சிங்- ஹோம் சயின்ஸ்- பார்மசி- இயற்பியல்- உயிரியல் சமூக அறிவியல் பிரிவு- அடல்ட் கன்டினியூயிங் எஜுகேஷன் அண்டு எக்ஸ்டென்ஷன்- ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்- ஈஸ்ட் ஏசியன் ஸ்டடீஸ்- பொருளாதாரம்- புவியியல்- வரலாறு- சோஷியல் ஒர்க்- சோஷியாலஜி இது தவிர- நுண்கலை- இசை- சட்டம்- கல்வி- மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ்- ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவம்- காமர்ஸ்- பினான்ஷியல்ஸ்டடீஸ்ஆகிய துறைகளும் இந்த பல்கலைக்கழகத்தில் உள்ளன.