அமைதியான சூழலில் தேஸ்பூர் பல்கலை - சிறந்த கல்வி நிறுவனங்கள் (46)
தேஸ்பூர் பல்கலைக்கழகம் 1984ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது அசாம் மாநிலம் தேஸ்பூரில் இருந்து 15 கி.மீ., தொலைவில் நபாம் பகுதியில் உள்ளது. கிராமப்புற பகுதி என்பதால் அமைதியான சூழலில் இந்த பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அசாம் பல்கலைக்கழகத்தை போன்றே இதுவும் மத்திய பல்கலைக்கழகமே. இந்த பல்கலைக்கழகத்தின் பரப்பளவு 242 ஏக்கர். இங்குள்ள துறைகள்அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் கீழ்- இயற்பியல்- வேதியியல்- கணிதம்- உணவு பதனிடுதல் தொழில்நுட்பம்- மாலிக்குலர் பயாலஜி அண்டு பயோடெக்னாலஜி ஹியூமானிட்டீஸ் மற்றும் சமூக அறிவியல் பிரிவின் கீழ்- இங்கிலிஷ் அண்டு பாரின் லாங்குவேஜஸ்- கல்சுரல் ஸ்டடீஸ்- மாஸ் கம்யூனிகேஷன் அண்டு ஜர்னலிசம்- சோஷியாலஜி இன்ஜினியரிங் பிரிவின் கீழ்- கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங்- எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்- மெகானிக்கல் இன்ஜினியரிங் எரிசக்தி துறையின் கீழ்- எரிசக்தி- சுற்றுச்சூழல் அறிவியல் நிர்வாக அறிவியல் துறையின் கீழ்- பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன் ஆகிய துறைகள் செயல்படுகின்றன. பேரிடர் மேலாண்மை குறித்த சிறப்பு மையமும் இங்குள்ளது. இங்குள்ள படிப்புகள்- எம்.எஸ்சி., அப்ளைடு கெமிஸ்ட்ரி- பி.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங்- மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்- எம்.டெக்., இன்பர்மேஷன் டெக்னாலஜி- பி.டெக்., எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்- எம்.டெக்., எலக்ட்ரானிக்ஸ் அண்டு டிசைன் டெக்னாலஜி- எம்.டெக்., பயோஎலக்ட்ரானிக்ஸ்- பி.டெக்., மெகானிக்கல் இன்ஜினியரிங்- எம்.எஸ்சி., மாலிக்குலர் பயாலஜி அண்டு பயோடெக்னாலஜி- எம்.எஸ்சி., கணிதம்- எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் சீஸ்மாலஜி- எம்.எஸ்சி., இயற்பியல்- எம்.எஸ்சி., நானோசயின்ஸ் அண்டு டெக்னாலஜி- எம்.எஸ்சி., புட்புராசசிங் டெக்னாலஜி- எம்.டெக்., எனர்ஜி டெக்னாலஜி- எம்.எஸ்சி., சுற்றுச்சூழல் அறிவியல்- எம்.ஏ., கல்சுரல் ஸ்டடீஸ்- எம்.ஏ., ஆங்கிலம்- எம்.ஏ., மாஸ்கம்யூனிகேஷன் அண்டு சோஷியாலஜி- ஏம்.பி.ஏ.,- பி.ஜி., டிப்ளமோ இன் டூரிசம் மேனேஜ்மென்ட்- சர்டிபிகேட் கோர்ஸ் இன் சைனீஸ் இங்குள்ள நூலகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இங்கு ஏறத்தாழ 5 ஆயிரம் இ-புத்தகங்களையும் மாணவர்கள் வாசிக்க முடியும். இன்டர்நெட் இணைப்புடன் கூடிய கம்ப்யூட்டர் மையமும் இங்குள்ளது. இங்கு ஏழு ஹாஸ்டல்கள் உள்ளன. இவற்றில் 5 மாணவர்களுக்கு. இரண்டு ஹாஸ்டல்கள் மாணவிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.