வெளிநாடு சென்று படிக்க வேண்டுமா (6)
‘இன்டர்நேஷனல் இங்கிலிஷ் லாங்குவேஜ் டெஸ்டிங் சிஸ்டம்’ என்பதன் சுருக்கமே ஐ.இ.எல்.டி.எஸ்., ஆங்கில மொழியில் கவனித்தல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் திறனை சோதிக்கும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற தேர்வு இது. இதில் நல்ல மதிப்பெண் எடுத்தால் சர்வதேச பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பிரிட்டிஷ் கவுன்சில் நடத்தும் தேர்வை ஆன்லைனிலும் பதிவு செய்து கொள்ளலாம். எனினும் தேர்வு எழுதுபவர்களுக்கு பாஸ்போர்ட் அவசியம்.இதில் கம்ப்யூட்டர் சார்ந்து நடத்தப்படும் தேர்வு ‘சி.பி., ஐ.இ.எல்.டி.எஸ்.,’ இதில் கவனிக்கும், வாசிக்கும்,எழுதும் திறன்கள் சோதிக்கப்படுகின்றன. ‘சி.பி., ஐ.இ.எல்.டி.எஸ்.,’ தேர்வுகள் மாதம் ஒருமுறை டில்லியில் உள்ள ‘பிரிட்டிஷ் கவுன்சிலில்’ நடத்தப்படுகின்றன. இந்த தேர்வின் முடிவுகள் 13 நாட்களில் அறிவிக்கப்படும். முடிவுகள் மாணவர்களின் வீடுகளுக்கே கொரியர் மூலமாக அனுப்பிவைக்கப்படும். முடிவுகளை தெரிந்து கொள்ள எஸ்.எம்.எஸ்., வசதியும் உள்ளது. அல்லது பிரிட்டிஷ் கவுன்சிலின் வெப்சைட்டிலும் முடிவுகளை அறிய முடியும். வெப்சைட் முகவரி http://www.britishcouncil.org/indiaexamsielts.htm. தென்மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் முடிவுகள் அனுப்பப்படுகின்றன. இந்த தேர்வு நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கவனிக்கும் திறன் - 30 நிமிடம்வாசிக்கும் திறன் - 1 மணி நேரம் எழுதும் திறன் - 1 மணி நேரம் பேசும் திறன் - 13 முதல் 15 நிமிடங்கள் கவனிக்கும், வாசிக்கும், எழுதும் தேர்வு ஒரே நாளில் நடத்தப்படும். பேச்சுத்திறன் தேர்வு அதற்கு முன்போ, பின்போ ஏழு நாட்களுக்குள் நடத்தப்படும். எனினும் தற்போது பிரிட்டிஷ் கவுன்சிலில் ஒருநாள் இடைவெளியில் இவற்றை நடத்தி முடித்து விடுகின்றனர்.