உள்ளூர் செய்திகள்

ஏ.எப்.எம்.சி., - சிறந்த கல்வி நிறுவனங்கள் (71)

ராணுவ மருத்துவக்கல்லூரி (ஏ.எப்.எம்.சி.,) மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் 1948ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ராணுவ மருத்துவப் பயிற்சி மையம், ராணுவ உடல்நலப்பள்ளி, நோய்களை கண்டறியும் ஆய்வுக்கூடம், ரத்த மாற்று பயிற்சிப்பள்ளி, கதிரியக்க ஆய்வகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்த மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவக்கல்லூரிகளில் இதுவும் ஒன்று. இது நாசிக்கில் உள்ள ஹெல்த் சயின்ஸ் பல்கலை.,யுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏ.எப்.எம்.சி., யில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் மொத்தம் 130 இடங்கள் உள்ளன. மாணவிகளுக்கு மட்டும் மொத்தம் 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இக்கல்லூரியில் படித்த மாணவர்கள் ராணுவத்தில் கமிஷன்ட் ஆபிசராக கட்டாயம் பணியாற்ற வேண்டும். இதில் சேரும் மாணவர்களுக்கு ஹாஸ்டல் வசதிகள் மற்றும் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் இக்கல்லூரியில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பும் உள்ளது. இதில்ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு மட்டும் முதுகலைப்பட்டப்படிப்புகளில் சேர அனுமதி அளிக்கப்படுகிறது. இக்கல்லூரியில் உள்ள எம்.டி., படிப்புகள்-பீடியாட்ரிக்ஸ்-அனெஸ்தெசியா-பிரிவென்டிவ் அண்டு சோஷியல் மெடிசின்-டெர்மெட்டாலஜி அண்டு வெனராலஜி-ரேடியோடயக்னாசிஸ்-பார்மகாலஜி-மைக்ரோபயாலஜி-பாத்தாலஜி-சைக்கியாட்ரி-பிசியாலஜி-ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேசன்-மார்பக நோய்கள் மற்றும் பயோகெமிஸ்ட்ரி இதில் உள்ள எம்.எஸ்., படிப்புகள்-ஆட்டாரைனாலரின்காலஜி-ஆப்செஸ்ட்ரிக்ஸ் மற்றும் கைனகாலஜி- அனாடமி மற்றும் ஆர்த்தோபீடிக்ஸ் இதில் உள்ள எம்.சிஎச்., படிப்புகள்-நியூரோ சர்ஜரி-பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் சி.டி., சர்ஜரி இதில் உள்ள பி.எச்டி., படிப்புகள்-பிசியாலஜி-மைக்ரோபயாலஜி மற்றும் பிரிவென்டிவ் மற்றும் சோஷியல் மெடிசின் இங்கு மாணவர்கள் மற்றும் மாணவிகள் தனித்தனியே தங்கிப்படிக்கும் வகையில் ஹாஸ்டல் வசதிகள் உள்ளன. மாணவர்கள் விடுதி 1965ம் ஆண்டில் கட்டப்பட்டது. இங்கு மொத்தம் 440 அறைகள் உள்ளன. மாணவிகள் விடுதி 1984 ம் ஆண்டு கட்டப்பட்டது. மாணவிகளுக்கென 130 அறைகள் உள்ளன. அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்வதால் ஆசியாவிலேயே சிறந்த கல்விநிறுவனமாக ஏ.எப்.எம்.சி., செயல்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !