கிளினிக்கல் டேட்டா மேனேஜ்மென்ட்
ஐதராபாத்தின் மெட்வின் மருத்துவ குழுமத்தை சேர்ந்த பயோமெட் இன்பர்மேட்டிக்ஸ் கிளினிக்கல் டேட்டா மேனேஜ்மென்ட் என்ற புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. மருத்துவத்துறைக்கு தேவையான தகவல் சேகரிப்பு வல்லுனர்களை உருவாக்குவதே இந்த படிப்பின் நோக்கம் என இந்த கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த துறைக்கு வரும் 2010ம் ஆண்டில் 50 ஆயிரம் வல்லுனர்கள் தேவைப்படுவார்கள். படித்து முடித்தவுடன் மருந்து நிறுவனங்கள், மருத்துவமனைகள், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள், ஐ.டி., நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும். மருத்துவம் அல்லது பார்மசி படித்தவர்கள் இதில் சேரலாம். லைப் சயின்ஸ், மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, பயோடெக்னாலஜி ஆகிய பிரிவுகளில் முதுநிலை படிப்பை நிறைவு செய்தவர்களும் இதில் சேர்ந்து படிக்க முடியும். வயர்லஸ் கம்யூனிகேசன் துறையில் நவீன தொழில்நுட்பங்கள் ‘அட்வான்ஸ்ட் டெக்னாலஜிஸ் இன் வயர்லஸ் கம்யூனிகேசன்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கை தி இன்ஸ்டிடியூசன் ஆப் இன்ஜினியர்ஸ் (இந்தியா), தமிழக மையம் செப். 10ம் தேதி நடத்த உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் இக்கருத்தரங்கில் எம்.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐ.ஐ.டி., பெங்களூரு இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் ஆகிய கல்விநிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், பி.எஸ். என்.எல்., நோக்கியா, ஏர்செல், ஐடியா போன்ற நிறுவனங்களின் உயர்அதிகாரிகள் உட்பட நிபுணர்கள் பங் கேற்று ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர். இதில் பங்கேற்க மாணவர்களுக்கு ரூ.300, ஆசிரியர்களுக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எம்.ஏ., பப்ளிக் பாலிசி படிப்பு சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்காக எம்.ஏ., பப்ளிக் பாலிசி என்ற படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. முசவுரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆப் அட்மினிஸ்ட்டேஷன் நிறுவனத்துடன் இணைந்து இந்திராகாந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக்கழகம் இந்தப் படிப்பைத் தொடங்கியுள்ளது. நாட்டில் மாறி வரும் சமூக சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு அரசின் பொதுக் கொள்கைகள் தொடர்பான விஷயங்களைக் கற்றுத்தருவதற்கு ஏற்ற வகையில் இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பின் ஒரு பகுதியாக ஆய்வுக் கட்டுரையையும் (டெசர்ட்டேஷன்) சமர்ப்பிக்க வேண்டும்.