உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டு மொழிகளை படிக்கலாம்

வெளிநாட்டு மொழிகளை அறிந்துகொள்வது வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற உதவுகிறது. வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் கைகூப்பியபடியே வந்து, தமிழகத்தை சேர்ந்தவரிடம் ‘வணக்கம்’ என்று கூறினால் உடனடியாக அவரும் மகிழ்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகவல் தொடர்பு மேம்படுகிறது. வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அந்த நாட்டில் பேசப்படும் மொழி தெரிந்திருப்பது கூடுதல் அனுகூலமாகவே அமைகிறது. மற்றவர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ள முடியும். அறிவிப்பு பலகைகளை படித்து, தெரிந்து கொள்ள முடியும். அங்கு வசிக்கும் மக்களின் நடைமுறை கலாசாரம், பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ள முடியும். பிரெஞ்ச், ஜெர்மன் போன்ற மொழிகள் கற்றுக்கொள்ள எளிமையானவை. சீன மொழி போன்றவற்றை கற்பது கடினம். எனினும் பிரஞ்ச், ஜெர்மன் மொழிகளை இந்தியாவில் அதிகமானோர் கற்க தொடங்கிவிட்டனர். இதனால் சீன, ஜப்பானிய, கொரிய மொழிகள் தெரிந்திருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது எளிதாகியுள்ளது. ஜப்பானிய மொழி அறிந்து இன்டர்பிரட்டராக பணிபுரிபவர், ஒரு நாளுக்கு 5000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். ஒரு பக்கத்தை மொழிபெயர்க்க 500ரூபாய் வரை கிடைக்கிறது. இதற்கு அந்த மொழியை மூன்று ஆண்டுகளாவது கற்க வேண்டியது அவசியம். மொழிகள் தொடர்பான பாடங்களை கற்க அருகில் உள்ள பயற்சி மையங்களையே தேர்வு செய்வதே சிறப்பானது. ‘இந்தோ, ஜப்பான் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்டு இண்டஸ்டிரி’ தொலைநிலைக் கல்வியாக மொழி படிப்பை வழங்கி வருகிறது. ஜப்பானிய மொழி கற்க விரும்புபவர்கள் www.ijcci.com/lang.html என்ற வெப்சைட்டை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !