உள்ளூர் செய்திகள்

ஐ.எஸ்.பி., - சிறந்த கல்வி நிறுவனங்கள்-82

‘இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட்’ (ஐ.எஸ்.பி.,) கடந்த 2001ம் ஆண்டு ஆந்திராவின் ஐதராபாத் நகரில் தொடங்கப் பட்டது. கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஆந்திர அரசின் உதவியுடன், இந்தியாவின் மாபெரும் வணிக நிறுவனங்கள் இணைந்து இந்த கல்வி நிறுவனத்தை தொடங்கின. லண்டனில் வணிக பத்திரிகையான பினான்ஷியல் டைம்ஸ் உலகின் சிறந்த வணிக கல்வி நிறுவனங்கள் பற்றி கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் ஐ.எஸ்.பி., 15வது இடத்தை பிடித்துள்ளது. ஆசியாவில் சீனாவின் சி.இ.ஐ.பி.எஸ்.,க்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தை ஐ.எஸ்.பி., பிடித்தது. ஐ.எஸ்.பி., ஆராய்ச்சி சார்ந்த சுயச்சார்பு பெற்ற கல்வி நிறுவனம். அமெரிக்காவின் வார்ட்டன் கல்லுõரி, கெல்லாக் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், பிரிட்டனின் லண்டன் பிசினஸ் ஸ்கூல் ஆகியவற்றுடன் இணைந்து இந்த கல்வி நிறுவனம் செயல்படுகிறது. இங்கு வழங்கப்படும் படிப்புகள்- போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் (ஒரு ஆண்டு)- போஸ்ட் டாக்டரல் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் (இரண்டு ஆண்டு நான்கு மாதங்கள்) இது தவிர பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கான பகுதி நேர எக்சிகியூட்டிவ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் சேர குறைந்தது இரண்டு ஆண்டு பணி அனுபவம் அவசியம். ‘ஜிமேட்’ மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு நேர்காணல் நடைபெறும். அதில் வெற்றிபெறும் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். மைக்ரோசாப்ட், இன்போசிஸ், விப்ரோ போன்ற வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள ஐதராபாத்தின் முக்கியமான வணிக பகுதியில் ஐ.எஸ்.பி., அமைந்துள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு நூறு சதவீத வேலைவாய்ப்பு உறுதி. இங்கு படித்து வெளியேறும் மாணவர்களின் சராசரி தொடக்க சம்பளம் ஆண்டுக்கு 20 லட்ச ரூபாய். இதன் நிர்வாக குழுவில் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களான ரத்தன் டாடா, அனில் அம்பானி, லட்சுமி மிட்டல், ராகுல் பஜாஜ், நாராயண மூர்த்தி, சிவ் நாடார் போன்றோர் இடம் பெற்றுள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு அமெரிக்க அதிபர் புஷ் இந்தியா வந்த போது ஐ.எஸ்.பி.,க்கு சென்று மாணவர்களுடன் உரையாடினார். ஐ.எஸ்.பி.,யின் நவீன நூலகத்தில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அனைத்து மாணவர் அறைகளுக்கும் இன்டர்நெட் வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஐ.எஸ்.பி., வளாகத்தில் புத்தகக்கடை, வங்கி ஆகியவை அமைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !