மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எல்.ஆர்.ஐ)
அறிமுகம்: உலகின் மிகப்பெரிய தோல்(லெதர்) ஆராய்ச்சி நிறுவனமான, CLRI எனப்படும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் சென்னையில் தொடங்கப்பட்டது. இன்று இந்திய தோல் துறையில் ஒரு முக்கிய அமைப்பாக இருந்து அத்துறை சம்பந்தமான கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, சோதனை, வடிவமைப்பு, முன்னேற்பாடு, திட்டமிடுதல், சமூக மேம்பாடு போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் தோல் ஆராய்ச்சி சம்பந்தமான பல துறைகளோடு, இயற்பியல், வேதியியல், உயிரியல், தகவல் அறிவியல்கள் மற்றும் இன்ஜினீயரிங் அறிவியல்கள் போன்ற அறிவியல் பிரிவுகள், தத்தமது உட்பிரிவுகளோடு உள்ளன. மேலும் இந்நிறுவனம் அகமதாபாத், கான்பூர், ஜலந்தர், கொல்கத்தா போன்ற இடங்களில் மண்டல மையங்களையும் கொண்டுள்ளது. தோல்(லெதர்) சம்பந்தமான படிப்புகளின் மீது ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு, பலவித படிப்புகளை CLRI நடத்துகிறது. இந்த படிப்புகள், பிற கல்வி நிறுவனங்களுடன் இணைந்தோ அல்லது தனித்தோ நடத்தப்படுகின்றன. எனவே என்னென்ன படிப்புகள் மற்றும் அதற்கான விவரங்களை இங்கே விரிவாக வழங்கியுள்ளோம். அகடெமிக் பாடங்கள் - தேசிய அளவிலானது: வ.எண் பாடம் நிலை காலம் 1. பி.டெக். (லெதர் தொழில்நுட்பம்)* 10+2 (பள்ளி உயர்நிலை மற்றும் மேல்நிலை தகுதி) MPC **(Academic Stream) *** 4 வருடகள் (8 semesters) 2. பி.டெக். (லெதர் தொழில்நுட்பம்) (பகுதி நேரம்)* லெதர் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ 3½ வருடங்கள் (7 Semesters) 3. எம்.டெக். (லெதர் தொழில்நுட்பம்)* பி.டெக். (லெதர் தொழில்நுட்பம்) *** 2 வருடங்கள் (4 Semesters) 4. எம்.டெக். (காலணிகள் அறிவியல் & பொறியியல்)* பி.டெக் (லெதர் தொழில்நுட்பம்)(அல்லது) ***பி.இ. (மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்) 2 வருடங்கள்(4 Semesters) 5. எம்.எஸ். (ஆய்வு படிப்பு)* சம்பந்தப்பட்ட படிப்பில் பி.டெக்./பி.இ. 2 வருடங்கள்(4 Semesters) 6. லெதர் தொழில்நுட்பத்தில் முனைவர் படிப்புகாலணிகள் அறிவியல்& பொறியியல்வேறுபட்ட துறைகளின் அறிவியல் & கெமிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில் முனைவர் பட்டம்(அண்ணா பல்கலைக்கழகம் & மற்ற பல்கலைக்கழகங்கள்) சம்பந்தப்பட்ட படிப்பில் முதுநிலை பட்டம்# UGC மற்றும் CSIR நடத்தும் NET, JRF அல்லது GATE தேர்வுகளில் தேறியவர் குறைந்தது: 2 வருடங்கள் அதிகபட்சம்: 6 வருடங்கள் குறைந்தபட்சம்: 2 அலல்து 3 வருடங்கள் அதிகபட்சம்: 6 வருடங்கள் * இந்த படிப்புகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்படுகின்றன. * MPC - கணிதம், இயற்பியல், வேதியியல் * அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்க்கை நடைபெறுகிறது * கல்வி கட்டணம் அந்த பல்கலைக்கழகத்திலேயே செலுத்தப்பட வேண்டும். இந்த படிப்புகளைப் பற்றி மேலும் விவரம் அறிய, www.clri.nic.in என்ற வலைத்தளம் செல்லவும். தொழில்முறை பாடங்கள்: இந்த பாடங்கள் முழுவதும் CLRI -ஆல் மட்டுமே வடிவமைக்கப்பட்டு, திட்டமிடப்பட்டு நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகள் தொழில்முறை சம்பந்தமான தேவைகளுக்கு மிக அத்தியாவசியமானவையாக மாறியுள்ளன. மேலும் குறிப்பிட்ட பகுதிகளின் முக்கியத்துவம் கருதி, அவற்றை தேர்ந்தெடுத்து அப்பகுதிகளிலும் தனது நீட்டிப்பு மையங்களின் மூலம் டிப்ளமோ படிப்புகளை வழங்குகிறது. தற்போது தனது குறுகிய கால தொழில்முறை படிப்புகளை, டிப்ளமோ அந்தஸ்திற்கு உயர்த்தி, படிப்பிற்கான காலகட்டத்தை குறைந்தது ஒரு வருடம் என்ற நிலையில் உயர்த்தியுள்ளது. இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.100 அந்த டிப்ளமோ படிப்புகளின் விவரங்கள் இங்கே விரிவாக வழங்கப்பட்டுள்ளது. வ.எண் பாடம் நிலை காலம்/ பாடம் கல்வி கட்டணம் உள்நாடு வெளிநாடு 1. லெதர் ப்ராசசிங் படிப்பில் முதுநிலை டிப்ளமோ இளநிலை படிப்பில் அறிவியல் பாடத்தில் 50% மதிப்பெண் இருக்க வேண்டும். வேதியியலும் ஒரு பாடமாக இருக்க வேண்டும் 52 வாரங்கள்/ஜூலை ரூ.20,000 US $5000 2. லெதர் ப்ராசசிங் படிப்பில் டிப்ளமோ 10௦, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் அல்லது சமமான தேர்வுகளில் 50% மதிப்பெண் இருக்க வேண்டும் 52 வாரங்கள்/ஜூலை ரூ.20,000 US $5000 3. லெதர் பொருட்கள் சம்பந்தமான டிப்ளமோ படிப்பு 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் அல்லது அதற்கு சமமான தேர்வுகளில் 50% மதிப்பெண் இருக்க வேண்டும் 52 வாரங்கள்/ஜூலை ரூ.20,000 US $5000 4. லெதர் கார்மென்ட் படிப்பில் டிப்ளமோ 10 , 12 ஆம் வகுப்பு தேர்வுகள் அல்லது அதற்கு சமமான தேர்வுகளில் 50% மதிப்பெண் இருக்க வேண்டும் 52 வாரங்கள்/ஜூலை ரூ.20,000 US $5000 5. காலணிகள் சம்பந்தமான படிப்பில் டிப்ளமோ 10 , 12 ஆம் வகுப்பு தேர்வுகள் அல்லது அதற்கு சமமான தேர்வுகளில் 50% மதிப்பெண் இருக்க வேண்டும் 52 வாரங்கள்/ஜூலை ரூ.20,000 US $5000 இந்த படிப்பு விபரங்களை மேலும் அறிய www.clri.nic.in என்ற வலைத்தளம் செல்லவும். குறுகியகால சிறப்பு படிப்புகள்: தோல் துறையில் பணிபுரியும் முக்கிய நபர்களுக்காக இந்த குறிகியகால புத்துணர்வு படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவை 2 - 4 வாரங்கள் வரை நீளும் படிப்புகளாகும். இந்த படிப்புகளின் விவரம் இங்கே விரிவாக தரப்பட்டுள்ளது; வ.எண் பாடம் நிலை காலம் கட்டணம் உள்நாடு வெளிநாடு 1. லெதர் ப்ராசசிங் தொழில்நுட்பத்தில் எக்சிகியூடிவ் பயிற்சி பாடம் தொழில்முனைவோர், நிர்வாகிகள், தொழில்நுட்ப கலைஞர்கள் & மேற்பார்வையாளர்கள் 4 வாரங்கள் ரூ.10,000 US $ 1,000 2. i. லெதர் உற்பத்தி ii. காலணிகள் உற்பத்தி போன்றவற்றில் குவாலிட்டி கண்ட்ரோல் முறைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் & பகுப்பாய்வாளர்கள் 4 வாரங்கள் 4 வாரங்கள் ரூ.10,000ரூ.10,000 US $ 1,000 US $ 1,000 3. காலணிகள் உற்பத்தியில் எக்சிகியூடிவ் பயிற்சி பாடம் தொழில்முனைவோர், நிர்வாகிகள், தொழில்நுட்ப கலைஞர்கள் & மேற்பார்வையாளர்கள் 4 வாரங்கள் ரூ.10,000 US $ 1,000 4. சோல் மவுல்ட் வடிவமைப்பு & உற்பத்தி வடிவமைப்பாளர்கள் & தொழில்நுட்ப வல்லுநர் 52 வாரங்கள் ரூ.15,000 US $ 1,500 5. யூனிட் சோல்(Unit sole) உருவாக்கம் நிர்வாகிகள் & தொழில்நுட்ப கலைஞர்கள் 1 வாரம் ரூ.5,000 US $ 500 6. ஷூ வடிவமைப்பு வடிவமைப்பாளர்கள் & தொழில்நுட்ப வல்லுனர்கள் 3 நாட்கள் ரூ.3,000 US $ 300 7. காலணிகள் தயாரிப்புக்கான மெஷின் இயக்கங்கள் தொழில்முனைவோர்கள் & மேற்பார்வையாளர்கள் 1 வாரம் ரூ.5,000 US $ 500 8. தொல்பொருட்கள் தயாரிப்பில் எக்சிகியூடிவ் பயிற்சி படிப்பு தொழில்முனைவோர், நிர்வாகிகள், தொழில்நுட்ப கலைஞர்கள் & மேற்பார்வையாளர்கள் 4 வாரங்கள் ரூ.10,000 US $ 1,000 9. லெதர் பொருட்கள் & கார்மென்ட் தொழிற்சாலைகளில் இயந்திரங்களை பராமரித்தல் தொழில்முனைவோர்கள் & மேற்பார்வையாளர்கள் 2 வாரங்கள் ரூ.3,000 US $ 300 10. தோல் கார்மென்ட்ஸ் தயாரிப்பில் எக்சிகியூடிவ் பயிற்சி படிப்பு தொழில்முனைவோர், நிர்வாகிகள், தொழில்நுட்ப கலைஞர்கள் & மேற்பார்வையாளர்கள் 4 வாரங்கள் ரூ.10,000 US $ 1,000 11. லெதர் கார்மென்ட் பேட்டர்ன் வடிவமைப்பு வடிவமைப்பாளர்கள் & தொழில்நுட்ப வல்லுனர்கள் 5 வாரங்கள் ரூ.10,000 US $ 500 12. பயிற்சியாளர் – பயிற்சிமுறை பயிற்சியாளர்கள் & தொழில்நுட்ப கலைஞர்கள் 3 வாரங்கள் ரூ.5,000 US $ 500 13. அரிலமின் அடிப்படையிலான சாயங்களின் பகுப்பாய்வுக்கான பயிற்சி பாடம் பகுப்பாய்வாளர்கள் & தொழில்நுட்ப வல்லுனர்கள் 1 வாரம் ரூ.10,000 US $ 1,000 14. வேதியியல் விபத்துகளின் தொடர் பகுப்பாய்வு பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், விஞ்ஞானிகள் & மேலாளர்கள் 2 நாட்கள் ரூ.4,000 US $ 1,000 15. ஆபத்து & செயல்பாட்டு படிப்பு பொறியாளர்கள் , தொழில்நுட்ப வல்லுனர்கள், விஞ்ஞானிகள் & மேலாளர்கள் 2 நாட்கள் ரூ.4,000 US $ 1,000 16. பாதுகாப்பு தணிக்கை பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், விஞ்ஞானிகள் & மேலாளர்கள் 1 நாள் ரூ.2,000 US $ 1,000 17. செயல்பாட்டு பாதுகாப்பு மற்றும் குவாண்டிடேடிவ் ஆபத்து அளவீடு ஆகியவற்றில் மேம்பாட்டு படிப்பு பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், விஞ்ஞானிகள் & மேலாளர்கள் 2 நாட்கள் ரூ.4,000 US $ 1,000 18. மாசு கட்டுப்பாடு i. நீர் பகுப்பாய்வு ii. சிகிச்சை முறைகள் பகுப்பாய்வாளர்கள் & தொழில்நுட்ப வல்லுனர்கள்,பகுப்பாய்வாளர்கள் & தொழில்நுட்ப வல்லுனர்கள் 4 வாரங்கள் 4 வாரங்கள் ரூ.10,000ரூ.10,000 US $ 1,000 US $ 1,000 19. தயாரிப்புகள் மூலம் விலங்குகளின் பயன்பாடு (Utilisation of Animal By ப்ரோடுக்ட்ஸ்) தொழில்முனைவோர் & கிராமப்புற தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் 4 வாரங்கள் ரூ.10,000 US $ 1,000 20. விதவிதமான கையுறை தயாரிப்பு தொழில்நுட்ப கலைஞர்கள் & தொழில்நுட்ப வல்லுனர்கள் 8 வாரங்கள் ரூ.10,000 US $ 1,000 21. பெல்ட் தயாரிப்பு தொழில்நுட்ப கலைஞர்கள் & தொழில்நுட்ப வல்லுனர்கள் 2 வாரங்கள் ரூ.7,000 US $ 1,000 இந்த படிப்புகள் பற்றி மேலும் விபரம் அறிய www.clri.nic.in என்ற வலைத்தளம் செல்லவும். நவீன வடிவமைப்பு மற்றும் மாடல் சம்பந்தமான படிப்புகள்: இன்றைய சந்தையில் அதிகரித்துவரும் தேவைகளை கருத்தில்கொண்டு, லெதர் பொருள் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக உத்தேசித்து தொடங்கப்பட்ட குறுகியகால படிப்பு இது. இந்த படிப்பில் சேர லெதர் பொருட்களைப் பற்றிய அடிப்படை அறிவு இருக்கவேண்டியது அவசியம். அந்த படிப்பு சம்பந்தமான விவரங்களை இங்கே தருகிறோம், பாடத் திட்டம் அலங்கார வடிவமைப்பு: (கைமுறை) * லெதர் பொருட்களின் அறிமுகம் * ஆண் & பெண்களுக்கான லெதர் பொருட்கள் * கைப்பிடி பைகள்/தோள் பைகள் * எக்சிகியூடிவ் தயாரிப்புகள் * பயணம்/விளையாட்டுப் பைகள் லெதர் பொருட்களுக்கான CAD * CAD சிஸ்டத்தின் அறிமுகம் * வடிவமைப்பு டிஜிடைசிங் * அலங்கார கட்டமைப்பு * நெஸ்டிங் * பயன்பாட்டு அளவீடு மற்றும் அறிக்கைகள் படிப்பின் காலம் & நேரம்: ரெகுலர் - 8 வாரங்கள் (காலை 9 முதல் நண்பகல் 1 வரை) படிப்பு கட்டணம்: ஒரு பங்கேற்பாளருக்கு(சேவை வரியை சேர்த்து) ரூ.10,000 வசூலிக்கப்படுகிறது. "Central Leather Research Institute, Chennai " என்ற பெயரில் டிடி எடுத்து, அதை பதிவு விண்ணப்பத்துடன், Head , CLAD, Central Leather Research Institute , Adyar, Chennai -20௦ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு, CLRI இயக்குனரின் கையொப்பத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்படும். இந்த படிப்பை பற்றி மேலும் விபரங்கள் அறிய clad@clri.res.in , cladclri@yahoo.comஎன்ற மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்பு கொள்ளவும். காலணிகள் வடிவமைப்பில் CAD படிப்பு: பெருகிவரும் தேவையை விரைவாக நிறைவு செய்யவும், பாரம்பரிய வடிவமைப்பு முறையில் இருக்கும் கட்டுப்பாடுகளை தவிர்க்கவும், காலணிகள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் சிறப்புவாய்ந்த CAD படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. CLRI தனது ஷூ வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையத்தின் மூலமாக இந்த படிப்பை வழங்குகிறது. இதன்மூலம் நீங்கள் காலணி தயாரிப்பில், வடிவமைப்பு மற்றும் 2D வடிவமைப்பு அலங்காரங்களில் நிபுணத்துவம் பெற முடியும். இந்த படிப்பின் அனைத்து நிலைகளிலும் நீங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படுவதோடு, அதன்மூலம் நீங்கள் ஷூமாஸ்டர் CAD சிஸ்டத்துடன் வேலை செய்யும் வழியேற்படும். காலம் & நேரம்: 2 வாரங்கள் (முழுநேரம்) காலை 10.30 முதல் மாலை 5.30 வரை (வாரத்தில் 5 நாட்கள்) சேரும் தகுதி: புதிதாக படிப்பை முடித்தவர்கள் அல்லது தொழில்நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் சேரலாம். விண்ணப்பதாரர்கள், வடிவமைப்பு சம்பந்தமான அடிப்படை படிப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும் கைமுறை வடிவமைப்பை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். தேவைப்பட்டால், பங்கேற்பாளர் தனது நிரூபண(proof) சான்றிதழை காண்பிக்க வேண்டும். கட்டணம்: 2 வாரங்களுக்கு கட்டணம் ரூ.10,000௦௦௦ "Director, CLRI என்ற பெயரில் DD எடுத்து அனுப்ப வேண்டும். இந்த படிப்பை பற்றிய அதிக விவரங்களை அறிய gauthamgk@gmail.com, gautham@clri.res.இன் என்ற முகவரிகளில் மின்னஞ்சல் அனுப்பவும். கார்மென்ட் பணிகளுக்காக CAD பயிற்சி படிப்பு: தோல் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகளில் பெருகிவரும் தேவையை பூர்த்தி செய்ய மற்றும் அத்துறையில் குறைந்த நேரத்தில் அதிகமான பணிகள் நடைபெறுவதை உறுதிசெய்யும் நிபுணர்களை அதிகரிக்க, கணினி தொழிநுட்பம் சார்ந்த CAD படிப்பு கார்மென்ட் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அத்துறைக்கு கிடைக்கும் பிற நன்மைகள்; * மெடீரியல் ஆப்டிமைசேஷன் * அதிகமான சேகரிப்பு மற்றும் விரைவான மீட்கொணர்வு * தயாரிப்பு திட்டம் * பகுப்பாய்வை மதிப்பிடல் இந்த படிப்பின் அம்சங்கள்: * கணினிகள் & செயல்பாட்டு சிஸ்டத்தின் அறிமுகம் * சேர்ப்பு வடிவமைப்பு மற்றும் திருத்தம் (Pattern input and editing) * வடிவமைப்பு படிநிலை * வடிவமைப்பு கட்டிங் மற்றும் பிளாட்டிங் * மார்கர் மேக்கிங் அண்ட் காஸ்ட் லே ப்ரோக்ராம் CAD படிப்பிலுள்ள உள்ளடக்கம்: * ஜெர்பர் கார்மென்ட் தொழில்நுட்பம் (GGT) AccuMark * LECTRA Modaris டியாமினோ * கையுறை மற்றும் பெல்ட் தயாரிப்புகளில் சிறப்பு பயிற்சி படிப்புகள் * மாற்றுத் திறனாளிகளுக்கு தேவைப்படும் தோல் பொருட்கள் சம்பந்தமான பயிற்சி படிப்பு படிப்பின் காலம் & நேரம்: முழுநேர படிப்பிற்கு 3 வாரங்களும், பகுதிநேர படிப்பிற்கு 6 வாரங்களும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. முழுநேரம் - காலை 9.30 முதல் 5.30 வரை (வாரம் 5 நாட்கள்) பகுதிநேரம் - காலை 9.30 முதல் நண்பகல் 1 வரை அல்லது மதியம் 2 முதல் மாலை 5.30 வரை (வாரம் 5 நாட்கள்) இந்த படிப்பு முக்கியமாக, கார்மென்ட் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. எனவே இதில் சேருபவர்களுக்கு, அத்துறையில் முன் அனுபவம் அல்லது வேலை பற்றிய அறிவு அல்லது அலங்கார வடிவமைப்பு பற்றிய அடிப்படை அறிவு இருப்பது அவசியம். கட்டணம்: ஒவ்வொரு பிரிவு படிப்பிற்கும் ரூ.10,000௦௦௦ வசூலிக்கப்படுகிறது. "Central Leather Research Institure , Chennai" என்ற பெயரில் DD எடுத்து அனுப்ப வேண்டும். இந்த படிப்பை பற்றி மேலும் விவரங்கள் அறிய clad@clri.res.in; cladclri@yahoo.com முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பேஷன் டிசைனுக்கான CAD படிப்பு: இந்த படிப்பும் கார்மென்ட் டிசைன் மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்காகவே முக்கியமாக ஆரம்பிக்கப்பட்டது. இப்படிப்பில் சேர்பவர்களுக்கும் அத்துறையில் முன் அனுபவம் அல்லது வேலை பற்றிய அறிவு அல்லது அலங்கார வடிவமைப்பு பற்றிய அடிப்படை அறிவு இருப்பது அவசியம். இது 6 வாரங்கள் கொண்ட படிப்பு. (ஒரு நாளைக்கு 4 மணிநேரம்). இதன் கட்டணம் ரூ.10,000௦௦௦ "Central Leather Research Institure , Chennai" என்ற பெயரில் DD எடுக்க வேண்டும். இந்த படிப்பு பற்றி மேலும் விபரம் அறிய clad@clri.res.in, cladclri@yahoo.comஎன்ற முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். கல்வி கற்கும் காலத்திலான நடைமுறை தொழில்நுட்ப பயிற்சி: நாட்டின் அறிவியல் கல்வி மற்றும் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக, கல்வி நிறுவனங்களுடன், CLRI இணைந்து, வளம் மற்றும் மேம்பாட்டு(Resource & Development) திட்டங்களுக்காக, கல்வி காலத்தின்போதான பயிற்சி திட்டங்களை மேற்கொள்கிறது. இவற்றில் BE/B.Tech/M .sc மற்றும் ME/M.Tech /M .phil போன்ற படிப்புகள் அடக்கம். BE/B.Tech/M .sc மாணவர்களுக்கு 3 மாதங்களுக்கு மிகாத பயிற்சி - கட்டணம் ரூ.5000 ME/M.Tech /M .phil மாணவர்களுக்கு 6 மாதங்களுக்கு மிகாத பயிற்சி - கட்டணம் ரூ.8500 இவைப்பற்றி மேலும் அறிய bchandru@clri.res.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். ௦௦௦