உள்ளூர் செய்திகள்

எக்ஸிக்யூட்டிவ் எம்.பி.ஏ. பாடப்பிரிவுகள்

நாங்கள் படிக்கும் காலத்தில் எல்லாம் இதுபோன்ற மேனேஜ்மென்ட் படிப்புகளை அளிக்கும் கல்வி நிலையங்கள் இல்யே என்று ஏங்குபவர்களா நீங்கள்? அப்படியானால் இது உங்களுக்கானதுதான். மேனேஜ்மென்ட் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களுக்காக ஓராண்டில் பயிலும் வகையிலான மேனேஜ்மென்ட் பாடப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒருவர் தான் பணியாற்றும் பணிச் சூழலுக்கு ஏற்ற ஒரு பாடப்பிரிவை தேர்வு செய்து பயிலும் வகையில் பல்வேறு மேனேஜ்மென்ட் பாடப்பிரிவுகள் உள்ளன. போஸ்ட் கிராஜுவேட் ப்ரோக்ராம் இன் மேனேஜ்மென்ட் ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் (ஐ.எஸ்.பி.), முழு நேர எம்.பி.ஏ. பாடப் பிரிவை வழங்குகிறது. இதில் சேர 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். போஸ்ட் கிராஜுவேட் ப்ரோக்ராம் இன் மேனேஜ்மென்ட் பார் எக்ஸிக்யூட்டிவ் ஐ.ஐ.எம். அகமதாபாத் வழங்கும் இந்த படிப்பு ஓராண்டு பயிலும் படிப்பாகும். குறைந்தது 7 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். ஜி.எம்.ஏ.டி. மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு சேர்க்கை நடத்தப்படும். போஸ்ட் கிராஜுவேட் ப்ரோக்ராம் பார் எக்ஸிக்யூட்டிவ் ஐ.ஐ.எம். கொல்கத்தாவில், 2007ஆம் ஆண்டு முதல் இந்த பாடப்பிரிவு நடத்தப்படுகிறது. ஓராண்டு பயிலும் இந்த படிப்பில் சேர, 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். ஜி.எம்.ஏ.டி. மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு சேர்க்கை நடைபெறும். எக்ஸிக்யூட்டிவ் போஸ்ட் கிராஜுவேட் ப்ரோக்ராம் இன் மேனேஜ்மென்ட் ஐ.ஐ.எம். இந்தூரில் ஓராண்டு பயிலும் இந்த பாடப்பிரிவில் சேர ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும் திறமைகள் பெற்றிருப்பது மிகவும் அவசியமாகும். சி.ஏ.டி. அல்லது ஜி.எம்.ஏ.டி. மதிப்பெண் அடிப்படையாக அமையும். குறைந்தது 5 ஆண்டுகள் நிர்வாகத் துறையில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். போஸ்ட் கிராஜுவேட் ப்ரோக்ராம் இன் மேனேஜ்மென்ட் எஸ்.பி. ஜெயின் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அன்ட் ரிசர்ச், மும்பை இந்த பாடப்பிரிவை வழங்குகிறது. இது 11 மாதங்கள் பயிலும் பாடப்பிரிவாகும். இந்த பாடப்பிரிவில் சேருவதற்கு முன்பு ஒருவர் ஆன்-லைனில் நடத்தப்படும் 6 மாத வகுப்பில் சேர வேண்டும். சி.ஏ.டி. அல்லது எக்ஸ்.ஏ.டி. அல்லது ஜி.எம்.ஏ.டி. தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை பொருத்து சேர்க்கை நடைபெறும். போஸ்ட் கிராஜுவேட் ப்ரோக்ராம் இன் மேனேஜ்மென்ட் கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், சென்னை இப்படிப்பை வழங்குகிறது. 7 முறைகளைக் கொண்டதாக இந்த ஓராண்டு கல்வி முறை அமைந்துள்ளது. இந்தியாவில் ஓராண்டில் அளிக்கும் பாடப்பிரிவில் இரண்டாம் இடத்தில் இந்த பாடப்பிரிவு உள்ளது. ஜெனரல் மேனேஜ்மென்ட் ப்ரோக்ராம் ஜாம்ஷெட்பூரில் உள்ள சேவியல் லேபர் ரிலேஷன்ஸ் இன்ஸ்டிடியூட் ஓராண்டில் கற்கும் முறையில் இந்தப் பாடப்பிரிவை அளிக்கிறது. குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். ஜி.எம்.ஏ.டி. அல்லது எக்ஸ்.ஏ.டி. மதிப்பெண்ணைப் பொறுத்து சேர்க்கை நடைபெறும். எக்ஸிக்யூட்டிவ் போஸ்ட்-க்ராஜுவேட் ப்ரோக்ராம் இன் மேனேஜ்மென்ட் பெங்களூர் ஐ.ஐ.எம். இந்த பாடப்பிரிவினை அளிக்கிறது. ஓராண்டில் பயிலும் வகையில் 7 முறைகளைக் கொண்டுள்ளது. செயல்முறைத் தேர்வுகளும் இதில் உள்ளன. இதில் சேர ஜி.எம்.ஏ.டி. மதிப்பெண் அடிப்படையாக இருக்கும். இன்டர்நேஷனல் ப்ரோக்ராம் இன் மேனேஜ்மென்ட் பார் எக்ஸிக்யூட்டிவ் லக்னோவில் உள்ள ஐ.ஐ.எம். இந்த பாடப்பிரிவினை வழங்குகிறது. நிறுவனங்களில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள், தலைமைப் பொறுப்பை ஏற்கும் வகையில் இது அமையும். இதில் சேர ஜி.எம்.ஏ.டி. மதிப்பெண் அடிப்படையாக இருக்கும். குறைந்தது 6 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !