மாற்று மருத்துவமான ஹோமியோபதி படிப்புகள்
ஹோமியோபதி என்பது, ஒரு நோயை, சிறிய அளவிலான திரவ மருந்துகளின் மூலம் குணப்படுத்தும் ஒரு மருத்துவ முறையாகும். இது ஒரு மாற்று மருத்துவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மருத்துவமுறை, முதன்முதலில் ஜெர்மன் மருத்துவர் சாமுவேல் ஹானிமன் என்பவரால் 1796 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஹோமியோபதி மருந்துகள், பொதுவாக பாதுகாப்பானவை என்ற கருத்து சமூகத்தில் உண்டு. ஹோமியோபதி படிப்பு: நீங்கள் பள்ளி படிப்பை, இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுடன் முடித்திருந்தால், பி.எச்.எம்.எஸ். படிப்பில்(பேச்சுலர் ஆப் ஹோமியோபதி மெடிசின் அண்ட் சர்ஜரி) சேர முடியும். சில ஹோமியோபதி கல்லூரிகள், 1 வருட இன்டர்ன்ஷிப் -உடன் கூடிய 5.5 வருட பி.எச்.எம்.எஸ். படிப்பை வழங்குகின்றன. மாணவர் சேர்க்கையானது, இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை உள்ளடக்கிய நுழைவுத்தேர்வின் அடிப்படையில், மெரிட் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதுதொடர்பான அதிக விவரங்களுக்கு www.cchindia.com என்ற இணையதளம் செல்லவும். ஹோமியோபதியிலுள்ள பலவித படிப்புகள்: இளநிலை படிப்பு: 1 வருட கட்டாய இன்டர்ன்ஷிப் -உடன் கூடிய 5.5 வருடங்கள் கொண்டது இந்த படிப்பு. தகுதி: பள்ளி படிப்பில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்கள் அல்லது அதற்கு சமமான பாடங்களை படித்திருக்க வேண்டும். கிரேடெட் ஹோமியோபதி பட்டப்படிப்பு: இந்த 2 வருட பட்டப் படிப்பில், 6 மாத கட்டாய இன்டர்ன்ஷிப் உண்டு. இந்த படிப்பானது, டிப்ளமோ முடித்தவர்களுக்கு, பட்டப் படிப்பு தகுதியை பெறுவதற்கான ஒரு இணைப்பாக இந்த படிப்பு பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும் ஹோமியோபதி கல்லூரிகளுக்கான பல தகுதி வரையறைகளை மத்திய கவுன்சில் வகுத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு கல்லூரியும் போதுமான வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும். மருத்துவமனை ஊழியர்கள், கருவிகள், தாங்கும் வசதி மற்றும் பிற வசதிகளை போன்றவைகளை கொண்டிருக்க வேண்டும். ஹோமியோபதி முதுநிலை பட்டப் படிப்பு(எம்.டி.): இந்த முதுநிலை பட்டப்படிப்பில், மெட்டீரியா மெடிகா, ஹோமியோபதிக் தத்துவம் மற்றும் ரெபர்டரி போன்ற பாடத்திட்டங்கள் உள்ளடங்கி உள்ளன. இப்படிப்பின் கால அளவு 3 வருடங்கள். இதில் ஒருவருட வீட்டுப்பணி அல்லது அதற்கு ஈடான பணியும் அடங்கும். பல்வேறு ஹோமியோபதி கல்லூரிகளின் தர நிலைகளை மதிப்பாய்வு செய்ய, மத்திய கவுன்சிலானது, மத்திய அரசு மற்றும் ஹோமியோபதி மத்திய கவுன்சிலின் முன் அனுமதி பெற்று, கல்லூரிகளின் கற்பித்தல் வசதிகள், சாதனங்கள், தங்குமிட வசதிகள், பணியாளர்கள் மற்றும் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் போன்றவைகளை ஆய்வு செய்கிறது. ஆசிரியர்களுக்கான பயிற்சி: மத்திய கவுன்சிலானது, ஹோமியோபதி கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், விரிவுரையாளர் நிலையிலுள்ள பணியாளர்கள் ஆகியோர், ஹோமியோபதி மத்திய சட்டம் மற்றும் அதன் கீழுள்ள பலவித கல்வி விதிமுறைகளைப் பற்றிய தெளிவைப் பெற, 3 நாட்கள் கொண்ட ஒரு பயிற்சி வகுப்பை திட்டமிட்டுள்ளது. மேலும் இதுபோன்ற வகுப்பை இதுவரை, டெல்லி, பெல்காம், புவனேஸ்வர், புனே, அலகாபாத், திருவனந்தபுரம் மற்றும் குவாலியர் ஆகிய 7 நகரங்களில் நடத்தியுள்ளது. இந்த பயிற்சி திட்டத்தில் இதுவரை மொத்தம் 178 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். ஹோமியோபதி படிப்பை வழங்கும் சில புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள்: டாக்டர். பி.ஆர். சூர் ஹோமியோபதிக் மருத்துவ கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் - www.delhihomeo.com நேரு ஹோமியோ மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை - www.delhihomeo.com இவைத்தவிர, ஆந்திரா, அருணாச்சல் பிரதேஷ், அசாம், பீகார், சண்டிகார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேஷ், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா, ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திர பிரதேஷ் மற்றும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் ஹோமியோபதி கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாட்டில், மதுரை மாவட்டம் திருமங்கலம், சென்னை கீழ்ப்பாக்கம், சென்னை போரூர், சேலம் மற்றும் கன்யாகுமரி உள்ளிட்ட இடங்களில் ஹோமியோபதி கல்லூரிகள் உள்ளன.