உட்புற அலங்காரத் தொழில்
உட்புற அலங்காரம் என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல. கட்டிடக்கலையின் அம்சங்கள், பொருளின் வடிவமைப்பு மற்றும் சுற்றுசூழல் உளவியல் போன்ற பல அம்சங்கள், உட்புற பரப்பை, நேர்த்தியாகவும், படைப்புத்திறன் மிக்கதாகவும் மாற்றும் பணியில் கலந்திருக்கின்றன. ஒரு உட்புற அலங்கரிப்பாளர் என்பவர், தனது திறமையை வெளிப்படுத்தும்போது, வாடிக்கையாளரின் தேவையையும் மனதில் கொண்டு, அவரை திருப்திப்படுத்த வேண்டும். தான் ஏற்கனவே திட்டமிட்ட வடிவமைப்பு முறையை மாற்றி செய்யவேண்டிய நிலை வந்தால், வாடிக்கையாளரின் தேவை மற்றும் விருப்பத்தைப் பொறுத்து, அதை மாற்றிக்கொள்ள அலங்கரிப்பாளர் தயங்கக்கூடாது. அவர் நெகிழ்வுத்தன்மை உடையவராக இருக்கக்கூடாது. இத்தொழிலுக்கு தேவைப்படும் பண்புகள்: நல்ல படைப்புத் திறன்தான் இத்தொழிலுக்கு அடிப்படையான மூலதனம். இத்தொழில் மீது மிகுந்த ஆர்வம் இருக்க வேண்டும். அலங்காரம் தொடர்புடைய பலவித பொருட்களைப் பற்றிய விரிவான அறிவும், அறிமுகமும் இருக்க வேண்டும். மேலும், எந்தெந்த வகை அலங்காரங்களுக்கு, எவ்வளவு பணம் செலவாகும் என்பதைப் பற்றியும் தெளிவான அறிவை பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான், வாடிக்கையாளர்களின் நிதிநிலைக்கேற்ப, ஒரு தெளிவான திட்டத்தை உடனடியாக தயாரித்து வழங்க முடியும். இத்துறையில் நுழைவது எப்படி: மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருப்பதே, உட்புற அலங்கார படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி. பலவித கல்வி நிறுவனங்களில், உங்களின் ஓவியம் மற்றும் வடிவமைப்பு திறனை சோதிக்கும் வகையில், நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எனவே, இத்தேர்வுகளில் உங்களின் திறமைகளை நிரூபிக்க வேண்டும். இப்படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்கள்: Madras University Avinashilingam University - Coimbatore Mangalore University Arch Academy of Design - Jaipur Amity School of Design - Delhi Guru Nanak Dev University - Amristar