பெட்ரோலியம் இன்ஜினியரிங்
நவீன யுகத்தில் பெட்ரோலியப் பொருள்களாக இருக்கட்டும், உற்பத்தி செய்கிற நிறுவனங்களாக இருக்கட்டும், நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து கொண்டே வருகிறது. அதனுடைய தேவைகளும் அதிகரித்துக் கொண்டே வருவதால், அவை சார்ந்த படிப்புகளும் முக்கியத்துவம் பெருகின்றன. பெட்ரோல் என்பது பூமிக்கு அடியில் கிடைக்கும் ஒரு எண்ணெய் வளம். இது பற்றிய படிப்பில் பெட்ரோலிய வளங்களை கண்டறிதல், எந்தெந்த இடங்களில் கிடைக்கும், சுத்திகரிக்கும் செயல்முறைகள், மூலப்பொருள்கள், பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் குறித்து கற்றுத்தரப்படும். இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவை அடிப்படைப் பாடத்திட்டமாக கொண்டிருக்கும்.பெட்ரோலியப் பொறியியலின் வகைகள்'அப்ஸ்ட்ரீம்'நிலத்திற்கு அடியிலும், கடலுக்கடியிலும் பல நூறு ஆண்டுகளுக்கு முன் உருவாகியிருக்கும் 'க்ரூட் ஆயில்' எனப்படும் கச்சா எண்ணெயை பலகட்ட ஆராய்ச்சிகள் மூலம் கண்டறிந்து அவற்றை மேலே கொண்டுவருவது 'அப்ஸ்ட்ரீம்' எனப்படும். இதில் பூமிக்கடியில் உள்ள பாறைகள், பாறைகளின் வகைகள், அவற்றின் தன்மைகள் பற்றி ஜியோசயின்ஸ் பிரிவில் கற்றுத் தரப்படும். நிலத்திற்கு அடியில் இருக்கும் நீரை எடுப்பது போல, பூமிக்கடியில் இருக்கும் கச்சா எண்ணை இருக்கும் இடத்தைக் கண்டறிந்து நிலம் மற்றும் பாறைகளை குடைந்து 'க்ரூட்' ஆயிலை எடுப்பதை ட்ரில்லிங் பாடத்திட்டத்தில் கற்றுத்தரப்படுகிறது. பின்னர் எண்ணெய் வளத்தை எடுக்கும் முறை குறித்தும், அதிகப்படியான எண்ணெய்யை ஈர்த்து கொண்டுவருவது குறித்தும் 4 வருட கால பாடத்திட்டத்தில் விரிவாக கற்றுத்தரப்படுகிறது.'டவுன்ஸ்ட்ரீம்'பரித்து பகுப்படுத்தி எடுக்கப்படும் கச்சா எண்ணெய்யிலிருந்து பெட்ரோல், டீசல், கேஸ், மண்ணெண்ணெய் மற்றும் இறுதியாக தார் ஆகியவை பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த செயல்பாடுகள் அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களில் நடைபெறும் ஒரு செயல்முறை. இவ்வாறு பிரிக்கப்படும் எரிவாயுக்களை சேமித்தல், விநியோகித்தல் போன்றவைகளும் கற்றுத்தரப்படுகிறது.'மிட் ஸ்ட்ரீம்''அப்ஸ்ட்ரீம்' மற்றும் 'டவுன்ஸ்ட்ரீம்' இவ்விரண்டுக்கும் நடுவில் நடக்கும் பணிகள் 'மிட் ஸ்ட்ரீம்' எனப்படும். அதாவது சேகரிக்கப்படும் கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு கொண்டு செல்லும் பணியே 'மிட்ஸ்ட்ரீம்'. பைப்லைன், எரிவாயு கண்டெய்னர்கள், கப்பல், ரயில் போன்ற எந்தவகையான போக்குவரத்து மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது என்பதைப் பற்றி படிப்பது 'மிஸ்ட்ரீம்'.பெரும்பாலான கல்லூரிகளில் 'அப்ஸ்ட்ரீம்' எனப்படும் கச்சா எண்ணெய்யை பிரித்தெடுக்கும் வகையே முக்கிய பாடத்திட்டமாகவும் விரிவான பாடத்திட்டமாக உள்ளது.தகுதி10 மற்றும் 12ம் வகுப்புகளில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றை முக்கிய பாடங்களாகக் கொண்டு குறைந்தது 50 சதவித மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பாடத்திட்டங்கள்பி.இ., / எம்.இ., - பெட்ரோலிய பொறியியல், பி.டெக்.,/எம்.டெக்.,- பெட்ரோலியப் பொறியியல், பிஎச்.டி., ஆகிய படிப்புகள் உள்ளன.பணி வாய்ப்புகள்டிரில்லிங் பொறியாளர், புரொடக்ஷன் பொறியாளர், இண்டஸ்ட்ரியல் பொறியாளர், ரிசர்வாயர் பொறியாளர், மெட்டீரியல் சயிண்டிஸ்ட், சுத்திகரிப்பு மேலாளர், பைப்லைன் போக்குவரத்து மேலாளர் உள்ளிட்ட வேலை பதவிகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் பெறலாம். இந்தியன் ஆயில், ஹெச்.பி., ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி., பாரத் பெட்ரொலியம் ஆகிய முன்னணி நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.