பேச்சுத் திறன்
பெருந்தலைவர்கள், அரசியல்வாதிகள், மேடை பேச்சாளர்கள், ஊக்கமூட்டும் பேச்சாளர்கள், ஆன்மீக பேச்சாளர்கள் என அனைவருக்கும் உள்ள பொதுவான ஒரு திறன் பேச்சாற்றல்.இவர்கள் பொதுமக்களை, பெருங்கூட்டத்தை தமது பேச்சால் ஈர்க்கும் திறன் மிக்கவர்கள். இந்தத்திறன் சிலருக்கு இயல்பாகவே இருக்கும். சிலர் தொடர் பயிற்சியின் மூலம் பெறுவார்கள். பொது இடங்களில் மட்டுமல்லாமல் பெருநிறுவனங்களில் தங்களது ஆய்வறிக்கையை விவரிக்கும்போதும், மாணவர் கூட்டத்தில் உறையாற்றும்போதும், அதிகாரிகளுக்கு திட்டங்களை விளக்கும்போதும் பேச்சுத் திறமை அவசியமாகிறது.சிறந்த பேச்சாளராக சில டிப்ஸ்:வலுவான முன்னுரைபொது கூட்டத்தில் பேசும்போது ஒரு வலுவான முன்னுரையுடன் ஆரம்பித்தல் வேண்டும். நாம் பேசவிருக்கும் விஷயத்தை பற்றி சுவாரஸ்யமான அறிமுகத்துடன் பேசுதல் வேண்டும். அதேபோல் முடிவுரையும் வலுவானதாக இருக்க வேண்டும். பேசி முடித்ததும் அதுபற்றிய விஷயங்களை யோசிக்கும் அளவுக்கு நிரம்பிய உள்ளடக்கத்துடன் இருக்க வேண்டும்.மூச்சுப் பயிற்சிபொது இடங்களில் பேசுவதற்கு முன் சீரான மூச்சுப் பயிற்சி செய்யலாம். உடலையும் மனதையும் தளர்வாக வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தல் வேண்டும். அதேபோல், பேசும் போதும் சீறான முறையில் முச்சை விட்டுக் கொண்டு பேச வேண்டும். ஒரே மூச்சில் ஒரு கருத்தையோ அல்லது தாங்கள் பேச நினைப்பதையோ பேசினால் பிறருக்கு புரியாது. நிதானமாக மூச்சைக் கட்டுப்படுத்திப் பேசும் போது பேச்சு தெளிவாக இருக்கும், கேட்பவர்களுக்கும் ஆர்வமாக இருக்கும்.இடை நிறுத்தம்எந்தெந்த இடத்தில் தேவையோ, அங்கே இடைநிறுத்தி பேச வேண்டும். சாதாரண பேச்சாளர்கள் இடைநிறுத்தமில்லாமல் கடகடவென பேசுவார்கள். ஆனால் சிறந்த பேச்சாளர்கள் எந்த இடத்தில் இடைநிறுத்த வேண்டுமோ, அந்த இடத்தில் இடைவெளிவிட்டு பேச்சைத் தொடர்வார்கள். சரளமாக பேச வேண்டிய இடத்தில் சரளமாகவும், இடைநிறுத்த வேண்டிய இடத்தில் இடைநிறுத்தியும், மெல்ல பேச வேண்டிய இடத்தில் மெதுவாகவும் பேசுவார்கள். குறிப்பாக, கூட்டதில் இருப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்ட அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்ற சுவார்ஸ்யத்தை ஏற்படுத்த இவ்வாறான முறைகளை கையாள்வார்கள்.கண் தொடர்புகூட்டத்தில் இருக்கும் அனைவரிடத்திலேயும் கண் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பகுதியில் இருப்பவர்களிடத்திலும் ஒரு பத்து வினாடிகள் வரை கண் தொடர்பு வைத்துக் கொள்ளும்போது அனைத்து தரப்பினரையும் தம் பேச்சால் ஈர்க்கப்பட்டு, அவர்களுடைய கவனத்தை தன்மீது வைத்திருக்குமாறு பார்த்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் பேசும் விஷயம் அவர்களிடம் சென்று சேரும்.கவனச்சிதறல் இல்லாமைசொல்லப்படும் ஒரு விஷயத்தை நேரடியாக தெளிவாக சொல்ல வேண்டும். சுற்றி வளைத்து சொல்லாமல், கேட்பவர்களுக்கு புரியும் வகையில் விஷயத்திற்கு ஏற்றவாறு, சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுபவரும் கவனத்தை சிதறவிடாமல், கேட்பவர்களும் சலிப்படையாமல் பேசுவதே சிறந்த பேச்சாளருக்கான தன்மை. தமது பேச்சுக்குத் தேவையான ஆடியோ-வீடியோக்கள் பயன்படுத்தி பேசுவதும் ஒரு சிறந்த முறை.கதை சொல்லல்சரியான கருத்துக்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க, கதை சொல்லல் என்பது புதிய உத்தியாக உள்ளது. கதைகள் எப்போதும் மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும். அதனூடே நாம் சொல்ல வரும் கருத்துகளையும் உட்புகுத்தி சொல்லும்போது எளிமையாக சென்றடைகிறது.பயிற்சிஇவ்வனைத்திலும் மிக முக்கியமான விஷயம் பயிற்சி... பொதுவெளியில் பேச ஆரம்பிப்பதற்கு முன் பயிற்சி மிக முக்கியம். பேசும்போது கருத்துகள் ஒப்புவித்தல் போல் இல்லாமல் இருக்க வேண்டும். பொதுவெளியில் எப்படி பேசினால் மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதை பல பேச்சாளர்களின் மேடை பேச்சுகளை, உதாரணமாக எடுத்துக் கொண்டு பயிற்சி செய்ய வேண்டும்.