உள்ளூர் செய்திகள்

படித்தால் பட்டம் மட்டும் கிடைக்கும்; வாசித்தால் வாழ்க்கையே ஜொலிக்கும்

வேலைதேடுவோரின் வாழ்வில் புத்தகம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். படிப்பு வேறு; வாசிப்பது வேறு. படிப்பால் பட்டம் கிடைக்கும். வாசித்தால் வாழ்க்கையே கிடைக்கும். அக்னி சிறகுகள் புத்தகமே, ஒருவரை பைலட்டாக்குவது எப்படி என்பதை கற்றுத்தந்தது.உங்கள் பெயரை நாடே திரும்பி பார்க்க வேண்டுமா? நீங்கள் ஒரு விஞ்ஞானியாக வேண்டும். இல்லாத ஒன்றை உருவாக்கிக் காட்டுபவராக நீங்கள் மாற வேண்டும். நாட்டின் பாதுகாப்பு சார்ந்த பணி என்பதால், மிகப்பெரிய பொறுப்பு மிக்க பதவியாக இது கருதப்படுகிறது.உலக அளவில் சிறப்பாக, திறனுடன் கூடிய போர் விமானத்தை நம் நாட்டினரால் வடிவமைக்க முடிகிறது என்றால், அதற்கு சிறந்த சிந்தனை, துல்லிய நினைவாற்றலே காரணமாகிறது; அது உங்களிடமும் உருவாக வேண்டும்.வகுப்பறை தாண்டி, பாடப்புத்தகத்தை தாண்டி யோசிப்பவர், ஆராய்பவர் தான் சாதிக்க தகுதியானவர்கள். சிவில் சர்வீசஸ் தேர்வு சற்று கடினமாக இருந்தாலும், சிரத்தை எடுத்தால் ஜெயித்து விடலாம்.டி.ஆர்.டி.ஓ., மூலம் ராணுவ கனரக வாகனம், ஏவுகணை, மின்னணு தொழில்நுட்பம், லைவ் சயின்ஸ், நீர்முழ்கி கப்பல், ஏ.ஐ., செயற்கை நுண்ணறிவு என பல துறைகளில் வாய்ப்புகள் உள்ளது. அதற்கு கேட் தேர்வு எழுத வேண்டும்; தேர்ச்சி பெற வேண்டும். தகுதித்தேர்வுகளில் தொடர்ந்து பங்கேற்று, திறமையை மெருகேற்ற வேண்டும்.நாட்டில் டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் 50 ஆய்வுக் கூடங்கள் இயங்குகின்றன.புதுமையான விஷயங்களை கற்று கொள்பவர்களும், சிந்திப்பவர்களும் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியாளராக திகழ்கின்றனர்.- டில்லிபாபு, இந்திய பாதுகாப்பு துறையின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.,) ராணுவ விஞ்ஞானி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !