உள்ளூர் செய்திகள்

திட்டமிடுநர் பணி - பிரமாண்டமும், சவாலும் கொண்ட பணி

இந்தியாவில் தற்போது 800 நகரங்கள் உள்ளன. ஆனால், 3000 தகுதிவாய்ந்த திட்டமிடுநர்கள் மட்டுமே உள்ளனர் என்பது அதிர்ச்சிக்குரிய ஒரு விஷயம். இந்தியாவின் பெருநகரங்கள், கிராமங்கள், வீட்டு வசதி அமைப்புகள் மற்றும் போக்குவரத்து போன்றவை, போதுமான திட்டமிடுநர்கள் இல்லாததால், பல சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இந்த குறைபாட்டிற்கு என்ன காரணம்? என்று யோசித்தால், தற்போது இத்துறை தொடர்பாக வழங்கப்படும் படிப்புகளின் குறைபாடே என்பது தெரியவரும். திட்டமிடுநர்களுக்கான தேவை, இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் அதிகமாக உள்ளது. என்ன வேறுபாடு? ஆர்கிடெக்டுகளுக்கும், திட்டமிடுநர்களுக்கும் இடையேயான வித்தியாசம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆர்கிடெக்ட் என்பவர் ஒரு கட்டடத்தை வடிவமைக்கிறார். ஆனால் திட்டமிடுநர், மாநகரங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்கள் போன்றவை, எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்பவராக இருக்கிறார். இவற்றில், மேம்பாட்டை நிர்வகித்தல், சிறப்பான வீட்டு வசதியை ஏற்படுத்தல், அழகிய கவர்ச்சிகரமான கட்டடங்களை உருவாக்குதல், பொது பயன்பாட்டு இடங்களை அமைத்தல், நல்ல சிறப்பான வணிக வளாகங்களை அமைத்தல், கிராமப்புறங்கள், மரங்கள், வயல் வெளிகள், காடுகள், புல்வெளிகள், நீர்வழிப் பாதைகள், ஆறுகள் மற்றும் ஆற்றங்கரைகள் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறைக்கான கொள்கைகளை வகுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அடங்கும். பல்வேறான அம்சங்கள் இவ்வளவு பெரிய பொறுப்புகளை, ஏறக்குறைய, ஒரு முழு நாட்டின் குடியிருப்பு கட்டமைப்பையே தீர்மானிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதால், திட்டமிடுநர்கள், பல்துறை அறிவையும் பெற்றிருப்பதோடு, பல துறை வல்லுநர்களிடமும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. நில அமைப்பு, மக்கள்தொகை, உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மனதில் இறுத்தி சிந்திக்க வேண்டும். மேலும், ஆர்கிடெக்டுகள், சமூகவியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பூகோள வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது. படிப்பின் அம்சம் முதுநிலை பிளானிங் படிப்பு, பலவித பிரிவுகளில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கும் திறந்து விடப்பட்டுள்ளது. அவர்கள், சவாலான ப்ராஜெக்ட்டுகளை எடுத்து செய்யும் ஆர்வமுள்ளவர்களாகவும், நல்ல திட்டமிடும் திறனுள்ளவர்களாகவும் இருத்தல் வேண்டும். B Plan மற்றும் M Plan - வேறுபாடுகள் இந்த இரண்டு படிப்புகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை மாணவர்கள் அறிந்துகொள்வது அவசியம். B Plan படிப்பு என்பது நேரடியாக, பள்ளிப் படிப்பை முடித்து இத்துறையில் நுழையும் ஒருவருக்கானது. அதேசமயம், M Plan படிப்பு என்பது, வேறு துறையில் இளநிலைப் படிப்பை முடித்து, இத்துறையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, இதில் நுழைவதற்காக, பலர் படிக்கும் படிப்பாகும். இந்த வகையில் பார்த்தால், M Plan படிப்பை மேற்கொள்ள நினைக்கும் B Plan மாணவர்களுக்கென்று ஏதேனும் மெரிட் இருக்கிறதா என்ற கேள்வி எழும். ஆம், இருக்கிறது. அவர்கள், தங்கள் இளநிலையில் படிக்கும் மண்டல மற்றும் நகர்ப்புற ஸ்பெஷலைசேஷன் பிரிவுகளிலிருந்து, முதுநிலையில், போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் ஸ்பெஷலைசேஷன் பிரிவுகளுக்கு மாறலாம். ஏனெனில், இப்பிரிவுகள், முதுநிலைப் படிப்பில் சிறப்பு வாய்ந்தவை மற்றும் நிறைய வேலை வாய்ப்புகளையும் கொண்டவை. ஸ்பெஷலைசேஷன்கள் மற்றும் அந்த படிப்புகளின் அம்சங்கள் நகர்ப்புறம் பல்வேறான திட்டமிடல் செயல்பாடுகள் மற்றும் தயாரிப்புகளின் மீது கவனம் செலுத்தி, ப்ராஜெக்ட் திட்டமிடல் மற்றும் ஐ.டி. உள்ளடங்கிய ரிமோட் சென்சிங் மற்றும் ஜி.ஐ.எஸ்., ஆகியவற்றின் நுணுக்கங்களை இப்படிப்பு கற்றுத்தருகிறது. வீட்டு வசதி உள்ளூர் மற்றும் மத்திய நகர்ப்புற ஆணையங்கள், வீட்டுவசதிக்கான நிதி நிறுவனங்கள், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஆலோசனை மையங்கள் ஆகியவற்றைப் பற்றிய நிஜ உலக அனுபவம் இப்படிப்பின் மூலம் கிடைக்கிறது. சுற்றுச்சூழல் ஒரு குடியிருப்பு திட்டமிடலை உருவாக்கும் முன்பாக, அப்பகுதியின் பூகோள அமைப்பு, சுற்றுச்சூழல் தன்மை மற்றும் எதிர்காலத்தில் ஏற்பட சாத்தியமுள்ள இயற்கைப் பேரிடர்கள் ஆகிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆராயும் அறிவை வழங்குவது இப்படிப்பின் நோக்கமாகும். போக்குவரத்து ஒரு நிர்மாண திட்டமிடல் பணியில், பல்வேறு வகையான போக்குவரத்து அம்சங்கள், அதன் இயக்கங்களுக்கான திட்டமிடல், எதிர்காலத்தில், போக்குவரத்து அமைப்புகள் சந்திக்கும் சிக்கல்கள், அதை களைவதற்கான தீர்வுகள், டிராபிக் செயல்பாடுகள் மற்றும் அமைப்புகள், பயன்படுத்தப்பட வேண்டிய தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்து விவாதிப்பது இந்த படிப்பாகும். பிராந்தியம் பிராந்திய பகுப்பாய்வு, பிராந்திய மற்றும் துணைப் பிராந்திய திட்ட தயாரிப்பு, செயல்பாட்டு தொடர்பான வியூகங்கள் மற்றும் மனித குடியிருப்பு மேலாண்மைக்கான முன் தயாரிப்புகள் ஆகியவற்றை கற்றுக்கொள்ளலாம். மேலும், நகர மற்றும் தேசிய திட்டமிடல் அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், இருதரப்பு மற்றும் பலதரப்பு நிதி ஏஜென்சிகள் ஆகியவைகளுக்கு தேவையான தொழில் நிபுணர்கள், இப்படிப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பணி வாய்ப்புகள் தனியார், பொதுத்துறை மற்றும் NGO -க்களில் பணிக்கு சேரலாம். ஆர்கிடெக்சுரல், உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைப்புகள், மாநில போக்குவரத்து நிறுவனங்கள், கட்டமைப்பு கம்பெனிகள், திட்டமிடல் அமைப்புகள், தனியார் ஆர்கிடெக்ட் அலுவலகங்கள், கட்டமைப்பு தொடர்பான அரசு அலுவலகங்கள், நில மேம்பாட்டு சேவை அமைப்புகள் போன்ற பலவற்றில் பணி வாய்ப்புகளைப் பெறலாம். இவைதவிர, வங்கிகள் மற்றும் இதர அமைப்புகளிலும் பணி வாய்ப்புகள் நிறைந்துள்ளன. இப்பணியின் சவால்கள் இத்துறையின் அரசுப் பணியில் இருப்பவர்கள், தாங்கள் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்த அரசியல் நிலவரங்கள் பற்றி அறிந்துகொள்வது அவசியம். ஏனெனில், அரசியல் சார்ந்த பிரச்சினைகளால், பல திட்டங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டதுண்டு. இதுதான் இத்தொழிலின் மிகப்பெரிய சவாலாகும். சுற்றுச்சூழல் தொடர்பான திட்டமிடுநர் பணிக்கு அதிக நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். ஏனெனில், இத்துறையின் விதிமுறைகள் சவாலானவை. திட்டமிடும் நிபுணர்களுக்கான பணியின் தன்மைகள் சிக்கல் நிறைந்த மற்றும் சவாலான ஒன்று என்றாலும், அது அதிக வருமானத்தையும் கொண்ட தொழில் என்பதையும் மறக்கக்கூடாது. படிப்பு Master of Planning; M.Tech Planning கல்வி நிறுவனங்கள் CEPT, AhmedabadSchool of planning and architecture (Delhi, Bopal, Vijayawada)NITs; IIT (Kharagpur; Roorkee)Institute of development studies (Mysore university)Pune institute of engineering and technology, PuneBengal engineering and science university, Shibpur, HowrahSVNIT, SuratCollege of engineering, Thiruvananthapuram தகுதிகள் BPlan; B.Tech/BE (Civil engineering / Architecture / environmental)Master's in economics, geography, statistics, sociology, operations reasearch.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !