உள்ளூர் செய்திகள்

ஆதி பராசக்தி பல்மருத்துவ கல்லூரி நிர்வாகிகள் ஜாமினை ரத்து செய்ய கோரி சி.பி.ஐ., மனு தாக்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில், உயர் படிப்புக்கு அனுமதி பெற்றுத் தருவதாக, பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினர், டாக்டர் முருகேசன், 25 லட்சம் ரூபாய், லஞ்சம் பெற்றதாக, கைது செய்யப்பட்டார். கல்லூரி நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் பல் மருத்துவ கவுன்சிலின் தமிழக தலைவர் குணசீலன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தற்போது, இவர்கள் ஜாமினில் வெளியே உள்ளனர். கல்லூரி நிர்வாக இயக்குனர் ஸ்ரீலேகா மற்றும் கல்லூரி நிர்வாகிகள் ராமபத்ரன், கருணாநிதி ஆகியோருக்கு வழங்கிய, முன் ஜாமினை மற்றும் ஜாமினை ரத்து செய்யக் கோரி, நேற்று சென்னை ஐகோர்ட்டில், சி.பி.ஐ., மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ராமபத்ரனின் கார் ஓட்டுனர் புஷ்பநாதனை, வாகன வருகை பதிவேடு உள்ளிட்ட, ஆவணங்களை கொண்டு வர, சி.பி.ஐ., கூறியிருந்தது. ஆனால், அவர் விசாரணைக்கு வரவில்லை. இதனால், கல்லூரி நிர்வாக இயக்குனர் மற்றும் நிர்வாகிகள் குறித்து விசாரிக்க முடியவில்லை. முதல்வர் தலைமறைவாகிவிட்டார். கல்லூரி பொருளாளர் மற்றும் அறங்காவலர் வெங்கடசாமிக்கு, நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியும், ஆஜராகவில்லை. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர், வழக்கின் விசாரணையை திசை திருப்பவும், சாட்சிகளை கலைக்கவும், ஆவணங்களை அழிக்கவும், சட்ட விரோதமாகவும் செயல்பட வாய்ப்புள்ளது. எனவே, இவர்களுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமின் மற்றும் ஜாமினை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்