உள்ளூர் செய்திகள்

மாணவருக்கு சிறப்பு வகுப்பு நடத்த தடை : புகார் வந்தால் பள்ளி மீது நடவடிக்கை

திருப்பூர்: தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது, என மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஏப்., மாதத்துடன் பொதுத்தேர்வு முடிந்துள்ள நிலையில் ஒன்பது, பத்து மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு அடுத்தாண்டுக்கான பாடங்கள் தற்போதே துவங்கி, சிறப்பு வகுப்புகளாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து, வெயிலின் தாக்கம் கடுமையாகி வருவதால், சிறப்பு வகுப்புகளுக்கு மாணவ, மாணவியரை வரவழைக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், திருப்பூர் மாவட்டத்தில் பல தனியார் பள்ளிகள் ஞாயிறு உட்பட அனைத்து நாட்களும் தொடர்ந்து இயங்கி வருகிறது.பள்ளி பஸ்கள் வாயிலாக, மாணவ, மாணவியரை அழைத்து செல்வதாகவும், ஆனால், பெற்றோர் தரப்பில் எழுத்துப்பூர்வமாக புகார்கள் வரவில்லை என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், கோடைக்காலத்தில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உத்தரவை மீறி சிறப்பு வகுப்பு நடத்தப்படும் பள்ளிகள் குறித்து, புகார் தெரிவித்தால், பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்