உள்ளூர் செய்திகள்

பணி ஓய்வு இடைநிலை, சிறப்பு நிலை ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

கோவை: தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பணி ஓய்வு இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர் சங்கத்தின் கோவை மண்டல பொதுக்குழு கூட்டம், நடந்தது. ரயில்வே ஸ்டேஷன் அருகே, தாமஸ் கிளப் வளாகத்தில் மாநில பொதுச்செயலாளர் மாணிக்கம் தலைமையில் நடந்த கூட்டத்தில், 2013ம் ஆண்டு ஏப்., 18ம் தேதி, பள்ளிக்கல்வி செயலர் அரசாணை, 69ஐ வெளியிட்டார். அதன்படி, 1988ம் ஆண்டு ஜூன், 1ம் தேதி முதல் தேர்வு நிலை, சிறப்பு நிலை, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையாக, மாற்றி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது தமிழகத்தில், 3,444 ஆசிரியர்களில் கோவையில் மூன்று பேருக்கு, இந்த அரசாணையின்படி நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. இவற்றை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்