உள்ளூர் செய்திகள்

ஜி.டி., பயிற்சி நிறுவன மாணவி; அகில இந்திய வர்த்தக தேர்வில் அபாரம்

கோவை: அகில இந்திய வர்த்தக தேர்வில், ஜி.டி., தொழில்நுட்ப பயிற்சி நிறுவன மாணவி, முதலிடம் பெற்றுள்ளார்.தேசிய தொழிற் பயிற்சி கவுன்சில், ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய வர்த்தக தேர்வு நடத்துகிறது.கடந்த ஆக., மாதம் நடத்தப்பட்ட இறுதித் தேர்வில், தமிழகத்தில் இருந்து, 29 மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.இதில், டூல் அண்ட் டை மேக்கர் (டைஸ் அண்டு மோல்ட்ஸ்) (என்.எஸ்.கியூ.எப்.,) பாடப்பிரிவில் படித்து வரும், ஜி.டி., தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் மாணவி அஷ்வினி பேபி ஆச்சார்யா, அகில இந்திய அளவில், பெண் மாணவர் என்ற பிரிவின் கீழ், 88 சதவீத மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். சென்னையில் நடந்த விழாவில், தமிழக முதல்வரிடமிருந்து சிறப்பு விருது பெற்றார். இவருடைய தந்தை கணபதியில் ஒரு சிறிய பட்டறை நடத்தி வருவதும், மாணவி அஷ்வினி, பட்டறைக்கு அவ்வப்போது சென்று, தந்தைக்கு உதவுவதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்