உள்ளூர் செய்திகள்

சோறுபோட பள்ளி என்ன ஹோட்டலா என கேட்போர் அன்று இல்லை; முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பள்ளியில் கல்வி தான் கற்றுக் கொடுக்க வேண்டும்; சோறுபோட அது ஹோட்டலா? என்று பேசும் அறிவுக்கொழுந்துகள் அன்று இல்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம். நல்லவேளை, பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா? என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று.அதனால்தான், எத்தனை நன்மை தமிழகத்திற்கு இன்று! கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்