அரசு துறை தீர்க்க முடியாத பிரச்னைகளை மாணவர்கள் தீர்த்து வைக்க திட்ட செயல்முறை
கிருஷ்ணகிரி: அரசு துறை தீர்க்க முடியாத பிரச்னைகளை மாணவர்கள் தீர்த்து வைக்க நான் முதல்வன் இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், நான் முதல்வன் நிரல் திருவிழா பயிற்சி பட்டறையை, டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் துவக்கிவைத்து பேசியதாவது:இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை கொண்டு தொடரும் சிக்கல்களை தீர்க்கவும், நம் மாணவர்களிடம் புத்தாக்கத்தை துாண்டுவதே ஆகும். தற்போது அனைத்து தொழில்நுட்ப இறுதியாண்டு படிப்புகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.நான் முதல்வன் திட்டத்தில், மாவட்ட அளவிலான அரசு துறை அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்ட பயிற்சி பட்டறை துவக்கப்பட்டுள்ளது. இதில், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறை சார்ந்த தீர்க்க இயலாத சிக்கல்களை அனைவரும் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும் சிக்கல்களை, தீர்க்கும் வகையில், இறுதியாண்டு படிக்கும், பொறியியல் கல்லுாரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக, திட்ட செயல்முறை மேற்கொள்வர்.பிரச்னைகளை பதிவு செய்ய விரும்புவோர், நான் முதல்வன் இணையதளத்தில் https://regniralthiruvizha.naanmudhalvan.in/ords/r/tnsdc/niralthiruvizha/login எனும் தளத்தில் பதிவு செய்யலாம். இறுதியாண்டு படிக்கும் பொறியியல் மாணவர்கள், செயல்முறை திட்ட வடிவம் கொடுப்பதன் மூலம், அவர்களின் அறிவு கூர்மையை மேம்படுத்துவதோடு, எதிர்கால தேவைக்கேற்ப புதிய படைப்புகள் வெளிகொண்டு வர இயலும்.இவ்வாறு, அவர் பேசினார்.கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான அரசுத் துறை அலுவலர்கள், 40க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன பிரதிநிதிகள், ஓசூர் தொழில் கூட்டமைப்பு சங்க பிரதிநிதிகள், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க பிரதிநிதிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.