உள்ளூர் செய்திகள்

இந்தியா - பாக்., எல்லை கேள்விக்கு மாணவர் அளித்த வித்தியாச பதில்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் பள்ளி தேர்வில், அரசியல் அறிவியல் பாடத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் எல்லை பற்றி எழுதுக என கேட்டிருந்த கேள்விக்கு, மாணவர் ஒருவர் அளித்த வித்தியாசமான பதில், இணையத்தில் பரவி கிண்டலுக்கு உள்ளானது.ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்ட பள்ளியில்,அரசியல் அறிவியல் தேர்வு சமீபத்தில் நடந்தது. அந்த தேர்வில், இந்தியா - பாகிஸ்தான் எல்லை இடையே இருப்பது எது, அதன் நீளம் எவ்வளவு என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது.எல்லைக்கு ஹிந்தியில், சீமா என பெயர். இந்த கேள்வியை தவறாக புரிந்துகொண்ட மாணவர் ஒருவர், இதற்கு பதிலாக, சமீபத்தில் தன் இந்திய காதலனை சந்திக்க பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வந்த சீமா ஹைதர் பற்றி எழுதியிருந்தார்.அதில், இந்தியா - பாகிஸ்தான் இடையே இருப்பவர் சீமா ஹைதர். அவர் உயரம் 5 அடி 6 அங்குலம். அவரால் தான் இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நடக்கிறது என பதில் எழுதி இருந்தார்.இந்த விடைத்தாள் நேற்று சமூக வலைதளங்களில் பரவியது. புதுமையான பதிலுக்கு மாணவனுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்பது போன்ற கிண்டல் கருத்துக்களை பலரும் பதிவிட்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்