உள்ளூர் செய்திகள்

இந்தியாவின் பரிசு கர்நாடக இசை விருது பெற்ற பாடகர் கிருஷ்ணா பெருமிதம்

சென்னை: இசை உலகில், இந்தியாவின் பரிசாக கர்நாடக இசையின் ராகம் உள்ளது என கர்நாடக இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.தி மியூசிக் அகாடமியின், 98ம் ஆண்டு மாநாடு மற்றும் இசை கச்சேரி துவக்க விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது.இதில், கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை, முன்னாள் நீதிபதி முரளிதர் வழங்கினார். ஜன., 1ம் தேதி வரை, 15 நாட்கள் நடத்தப்படும் விழாவில், 80க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகள், நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.ஆசிர்வாதம்விருது பெற்ற டி.எம்.கிருஷ்ணா பேசியதாவது:எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருது, என்னை போன்ற பாடகனுக்கு கிடைப்பது, எனக்கு கிடைத்த ஆசீர்வாதம். இந்த விருது, எனக்கு கூடுதல் பொறுப்பை வழங்கி உள்ளது. இசையை நாம் கற்கும்போதும், பயிற்சி செய்யும்போதும், அது நமக்கு என்ன வழங்கப்போகிறது என்பது, முழுமையாக தெரியாது.ஆனால், முழுமையாக ஒருவன் இசையை கற்றுக்கொண்டால், பின்னாளில், இசை நமக்கு வழங்கும் சிறந்த இடத்தை, வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாது. அதுபோல், கர்நாடக இசை, எனக்கும் ஒரு சிறந்த இடத்தை மக்கள் மனதில் வழங்கி உள்ளது.ரசிகர்களை மகிழ்விப்பது, எவ்வாறு ஒரு இசைக் கலைஞருக்கு மகிழ்ச்சி அளிக்கிறதோ, அதேபோல்தான், அவர்களின் கைத்தட்டல்களும், இசைக் கலைஞர்களின் காதுகளுக்கு, புதுவிதமான இசையை வழங்குகிறது.இசைக் கலைஞர்கள் பலர் கூறியதுபோல், இசை உலகில் இந்தியாவின் பரிசாக கர்நாடக இசையின் ராகம் உள்ளது. நம் அனைவருக்கும் உள்ளே ராகம் உள்ளது.அர்ப்பணிப்புஇந்நிகழ்வின் தொடர்ச்சியாக, இந்திய கலையில் ராகத்தின் பிரதிபலிப்புகள்' என்ற கருப்பொருளில் பலரும், தங்கள் கட்டுரையை சமர்ப்பிக்க உள்ளனர். இசை நமக்கான அமைதியை, அர்ப்பணிப்பை கொடுக்கிறது.பலரது உடைந்த மனதை சமநிலைப்படுத்தும் மருந்தாக இசை உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், முன்னாள் நீதிபதி முரளிதர் பேசுகையில், இசை குறித்து கூற வேண்டுமெனில், அது பல நாட்கள் நீண்டு கொண்டே செல்லும். அவை நமக்கு வழங்கும் உடல் மற்றும் மன ரீதியான அமைதி, உலகின் எந்த பகுதியிலும், யாராலும் வழங்க இயலாது.இன்று பலரின் வலி நீக்கியாகவும், உணர்வுகளை கட்டுப்படுத்தும் மருந்தாகவும் இசை உள்ளது, என்றார். விழாவில், மியூசிக் அகாடமி தலைவர் முரளி, சங்கீத கலாநிதி டாக்டர் சவுமியா, பாம்பே ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்