உள்ளூர் செய்திகள்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கணினி உதவியாளர் நியமிக்கப்படாததால் சிக்கல்

ராமநாதபுரம்: பள்ளிக் கல்வித்துறையில் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்வதற்காக கணினி உதவியாளர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படாததால் பதிவேற்றம் செய்யும் பணிகள் பாதிக்கப்படுகிறது.பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் எமிஸ் தளம், மத்திய அரசின் யுடைஸ் தளம் ஆகிய இணையதள பக்கங்களில் மாணவர்கள் விபரம், அலுவலக விபரம் பதிவேற்றும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கல்வி கற்பிக்கும் பணி பாதிக்கப்படுவதாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து அரசுப்பள்ளிகளில் மட்டும் கணினி உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் அரசு உதவி பெறும் பள்ளியில் கணினி உதவியாளர் நியமிக்கப்படாததால் ஆசிரியர்களே பதிவேற்றம் செய்யும் பணிகளை செய்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணிகள் பாதிக்கப்படுகிறது.எனவே அரசு உதவி பெறும் பள்ளிகளில் கணினி உதவியாளர் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்