உள்ளூர் செய்திகள்

நீட் தவிர்த்து பிற மருத்துவ படிப்புகளில் கவனம் செலுத்தலாம்: ரமேஷ் பிரபா

'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது.அதில், 'அதிக வேலை வாய்ப்புகள் குறித்த படிப்புகள்' என்ற தலைப்பில், கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா பேசியதாவது:மாணவர்கள் 'கூகுளில்' தேடுவதை நிறுத்த வேண்டும். அதில் வரும் தகவல்கள் அனைத்தும் உண்மை கிடையாது; அவை தகவல்கள் மட்டுமே தவிர, அறிவு கிடையாது.தேர்வு முடிவிற்கு பின், மாணவர்கள் விருப்பமான படிப்புகளை பட்டியலிட்டு, அதில் அவர்களால் எந்த படிப்பை புரிதலுடன் படிக்க இயலும் என்பதை பார்த்து, அதை தேர்வு செய்ய வேண்டும்.நீட் எழுதுவோர் 'ரிபீட்' என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது. முதல் முயற்சியில், 500 மதிப்பெண்ணிற்கு மேல் பெறுவோர், அடுத்த முறை எழுதலாம். 200க்கும் குறைவான மதிப்பெண் பெறுவோர், அடுத்த படிப்புகளை தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.பி.பார்ம்., பி.எஸ்.சி., நர்சிங், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல், பிசியோதெரபி, ரேடியாலஜி, லேப் டெக்னாலஜி உள்ளிட்ட, நீட் இல்லாத மருத்துவப் படிப்புகள் எராளம் உள்ளன. இதில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.தமிழக நர்சிங் படிப்புகளுக்கு என, உலக சந்தையில் சிறந்த வேலைவாய்ப்புகள் உள்ளன. பி.எஸ்சி., நர்சிங்கில் மட்டும், 30 வகை படிப்புகள் உள்ளன. நீட்டில் மட்டும் கவனம் செலுத்தாமல், இந்த படிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாணவ, மாணவியருக்கு லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் பரிசுமாணவர்களுக்கு பரிசு மழை'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில், நிபுணர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, பதில் அளித்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மாணவி கவிபாரதிக்கு, லேப்டாப்; மாணவர் யுரேன் கண்ணா மற்றும் தியாகராஜா பிள்ளை ஆகியோருக்கு, 'டேப்' பரிசாக வழங்கப்பட்டது. ஆறு மாணவர்களுக்கு 'ஸ்மார்ட் வாட்ச்' பரிசாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்