உள்ளூர் செய்திகள்

மத்திய அரசின் ஜவகர் நவோதயா பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்

புதுச்சேரி: காலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில், 6ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள், வரும் 23ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இது குறித்து பள்ளி முதல்வர் வினையத்தான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் புதுச்சேரி காலாப்பட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 2014-2015ம் கல்வியாண்டில் 6ம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு விண்ணப்பங்கள் வரும் 23ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலங்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. நடைபெறுகின்ற 2013-2014 ம் கல்வியாண்டில், 5ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள், அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவங்கள் கிடைக்கப்பெறாத பள்ளிகள் தங்கள் தேவைக்கு புதுச்சேரி முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் வரும் 23ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் அல்லது காலாப்பட்டில் உள்ள ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியின் இருந்தும் பெறலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள், அந்தந்த பள்ளி தலைமையாசிரியரின் கையொப்பத்துடன் வரும் அக்டோபர் 31ம் தேதியோ, அதற்கு முன்னதாகவோ புதுச்சேரி முதன்மைக் கல்வி அதிகாரியிடம் வந்து சேர்தல் வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்