இந்திய மருத்துவத்திற்கான மத்திய கவுன்சில் முதல் பெண் தலைவர் வனிதா முரளிகுமார்
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஆயுர்வேத பெண் மருத்துவர் டாக்டர்.வனிதா முரளிகுமார், இந்திய மருத்துவத்திற்கான மத்திய கவுன்சில்(CCIM) தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். Central Council of Indian Medicine எனப்படும் இந்த அமைப்பு, ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் திபெத் மருத்துவமுறை ஆகியவற்றுக்கான ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். கடந்த 1971ம் ஆண்டில் CCIM ஏற்படுத்தப்பட்டதிலிருந்து அதன் தலைவராக ஒரு பெண் மற்றும் ஒரு கல்வியாளர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக, இந்த அமைப்பின், முதல் பெண் துணைத் தலைவராக இவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்பின்போது தங்கப் பதக்கம் பெற்ற இவர், மேற்கூறிய பதவி தவிர, வேறுபல முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளையும் வகிக்கிறார்.