உள்ளூர் செய்திகள்

விவேகானந்தர் அமர்வை பல்கலைகளில் ஏற்படுத்தும் திட்டம்: யு.ஜி.சி. அனுமதி கிடைக்கவில்லை

சுவாமி விவேகானந்தர் அமர்வை பல்கலைகளில் ஏற்படுத்துவது தொடர்பான திட்டத்தில், தமிழக பல்கலைகளுக்கு, பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., அனுமதி கிடைக்கவில்லை. நாடு முழுவதும் உள்ள, மத்திய, மாநில பல்கலைகள், தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில், சுவாமி விவேகானந்தர் அமர்வு உருவாக்குவது தொடர்பான, திட்ட அறிக்கையை, யு.ஜி.சி., கோரியது. இதையடுத்து, 53 பல்கலைகள், இதற்கான திட்ட அறிக்கையை அளித்தன. இதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான கூட்டம், டில்லியில் நடந்தது. இதில், ஜம்மு மத்திய பல்கலை, கேரளாவின் ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருத பல்கலை உள்ளிட்ட, ஐந்து பல்கலைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. கொடைக்கானல் - மதர் தெரசா மகளிர்; மதுரை - காமராசர்; திருச்சி - பாரதிதாசன்; கோவை - பாரதியார்; நெல்லை - மனோன்மணியம் சுந்தரனார் மற்றும் சென்னை பல்கலை உள்ளிட்ட, 48 பல்கலைகளின் திட்ட அறிக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், பரிந்துரைக்கப்பட்ட ஐந்து பல்கலைகளுக்கும், அவை கோரியுள்ள நிதி வழங்கப்படும் என யு.ஜி.சி,. தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்