பள்ளிகள் திறப்பு எப்போது? விளக்கம் தர பள்ளி கல்வித் துறைக்கு உத்தரவு
சென்னை: பள்ளிகள் எப்போது திறக்க வாய்ப்பு உள்ளது என்பது தொடர்பாக, அரசிடம் விளக்கம் பெறும்படி, பள்ளி கல்வித் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், கல்வி கட்டணத்தை செலுத்தும்படி, பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என, கல்வி நிறுவனங்களுக்கு, 2020 ஏப்ரலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், கல்வி நிறுவனங்கள் மனுக்கள் தாக்கல் செய்தன.மனுக்களை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். ஆகஸ்ட் மாதத்தில், 40 சதவீத கட்டணமும், வகுப்புகள் துவங்கிய பின், இரண்டு மாதங்களில், 35 சதவீத கட்டணமும் வசூலித்துக் கொள்ள, நீதிபதி அனுமதி அளித்தார். நீதிமன்ற உத்தரவை மீறி, கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை அளிக்கவும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.பள்ளி கல்வித்துறை அறிக்கை அடிப்படையில், ஒன்பது பள்ளிகளுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்து, பதில் அளிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சி.பி.எஸ்.இ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 32 பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப் பதாக புகார்கள் வந்திருப்பதாக தெரிவித்தார்.இதையடுத்து, அந்தப் பள்ளிகளுக்கு எதிரான புகாரை விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதி உத்தரவிட்டார்.அப்போது, பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என தெரியாத நிலையில், மீதி உள்ள, 35 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ள அனுமதிக்கும்படி, பள்ளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கோரினர்.அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதா என, அரசிடம் விளக்கம் பெறும்படி, சிறப்பு பிளீடருக்கு, நீதிபதி அறிவுறுத்தினார்.&'பள்ளிகள் திறப்பது தொடர்பான அரசின் நிலையை பொறுத்து, மீதி கட்டணத்தை வசூலித்துக் கொள்வது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம்&' எனக் கூறி, விசாரணையை, நவ., 11க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.தற்போது முடிவெடுக்க முடியாது&'&'&'பள்ளிகள் திறப்பது குறித்து, தற்போது முடிவெடுக்க முடியாது,&'&' என, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.பள்ளி கட்டடங்களுக்கு முறையான அனுமதி பெறாத, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, இரண்டு ஆண்டு மட்டும் தொடர் அங்கீகாரம் அரசாணை வழங்கும் விழா, வேலுார் மாவட்டம், காட்பாடியில் நேற்று நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், 275 பள்ளிகளுக்கு, அங்கீகார அரசாணை வழங்கினார்.பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஆந்திராவில், பள்ளிகள் திறந்ததால் மாணவர்களுக்கு, கொரோனா பரவி உயிரிழப்பும் ஏற்பட்டது. எனவே, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து, தற்போது முடிவெடுக்க முடியாது. கொரோனா தாக்கம் குறைந்த பின் தான், முடிவெடுக்க முடியும்.அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு சட்டம் இயற்றி, அதை இந்தாண்டே செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா தாக்கம் குறையாததால், அரசு நடத்தும் கல்வி தொலைக்காட்சியில், 60 சதவீத பாடங்கள் மட்டும் நடத்தப்படுகிறது. எனவே, தேர்வில், 60 சதவீத பாடத்திலிருந்து மட்டும்தான் கேள்விகள் கேட்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.