உள்ளூர் செய்திகள்

காஞ்சிமாமுனிவர் மேற்படிப்பு மையத்தில் இரண்டு நாட்கள் நாக் கமிட்டி ஆய்வு

புதுச்சேரி: காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் நாளை முதல் இருநாட்கள் நாக் கமிட்டி ஆய்வு செய்ய உள்ளது.புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு நிறுவனம், நகர்ப்புற, கிராமப்புற மாணவர்களுக்கு உயர் கல்வியை வழங்கும் நோக்கத்துடன் 1989ம் ஆண்டு துவங்கப்பட்டது. புதுச்சேரி பல்கலைக்கழக இணைப்பு பெற்றுள்ள இக்கல்லுாரியில் கலை, மனிதநேயம், வணிகம் மற்றும் அறிவியல் துறைகளில் 16 முதுநிலை படிப்புகளும், 8 பி.எச்.டி., படிப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 1,139 மாணவர்கள் படித்து வருகின்றனர்.சிறந்த கல்லுாரியான காஞ்சிமானிவர் பட்ட மேற்படிப்பு மையத்தினை பாராட்டி நாக் கமிட்டி தர சான்றிதழ் வழங்கியுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு நடந்த நாக் கமிட்டியின் முதலாவது ஆய்வில் B + + கிரேடு சான்றிதழ் வழங்கி பாராட்டியது.அடுத்து 2013ம் ஆண்டு நடந்த இரண்டாவது நாக் கமிட்டி ஆய்வின்போது கல்லுாரிக்கு A கிரேடு சான்றிதழ் கொடுத்து மகுடம் சூட்டியது.கடந்த 2019ம் ஆண்டு நடந்த மூன்றாவது நாக் கமிட்டி ஆய்வில் மீண்டும் B++ கிரேடு சான்றிதழ் கிடைத்தது. இப்போது நான்காவது முறையாக காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்திற்கு நாக் கமிட்டி நாளை 4ம் தேதி முதல் இரண்டு நாட்கள் முகாமிட்டு ஆய்வு செய்ய உள்ளது.நாம் கமிட்டி வருகை குறித்து கல்லுாரி இயக்குனர் செல்வராஜ் கூறுகையில், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில்நாளை 4ம் தேதி மற்றும் 5ம் தேதி இரு நாட்கள் பல்கலைக்கழக மானிய குழுவின் தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவான நாக் கமிட்டி ஆய்வு செய்ய உள்ளது.முனைவர் கருணேஷ் சேக்சேனா தலைமையிலான இக்குழுவில் முனைவர்கள் அப்துல் வகிட் ஹஸ்மேனி, அல்கா பீஸ் அடங்கிய மூவர் இடம் பெற்றுள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்