உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்கள் மீதான குற்ற வழக்குகளை ரத்து செய்ய ஆசிரியர் சங்கம் கோரிக்கை

கோவை: வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான குற்றவியல் வழக்குகளை, அரசு ரத்து செய்த ஆணையை பின்பற்றி, வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என, தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து, தேசிய ஆசிரியர் சங்க மாநில செயலாளர் வினோத்குமார், தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதம்.தமிழகம் முழுவதும், 2016, 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு, அரசின் கொள்கைக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளும், குற்றவியல் வழக்குகளும் தொடரப்பட்டன.குற்றவியல் நடவடிக்கைகளை கைவிட வேண்டியும், வேலை நிறுத்தக்காலத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டியும், தேசிய ஆசிரியர் சங்கம்-, தமிழகத்தில் உள்ள பல்வேறு சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தன.இந்த கோரிக்கையை ஏற்று, அன்றைய தமிழக முதல்வர் அறிவிப்பின்படி, 2021ம் ஆண்டு குற்றவியல் நடவடிக்கைகளை கைவிடுவது, வேலை நிறுத்தக்காலத்தை பணிக்காலமாக கருதி, அந்த நாட்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, சங்கங்களின் கோரிக்கையை ஏற்று அரசு, ஆணை வெளியிட்டது.தமிழக அரசு ஆணை பிறப்பித்த பிறகும், இன்று வரை அந்த குற்றவியல் வழக்குகள், அப்படியே உள்ளன. அரசு வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில், அந்த குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்