மாவட்ட அளவில் சாதனை படைத்த மவுண்ட் பார்க் பள்ளி: மாணவர்களுக்கு பாராட்டு
தியாகதுருகம்: பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சாதனை படைத்த மவுண்ட் பார்க் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப் பள்ளியில் இவ்வாண்டு 478 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று, பள்ளி 100 சதவீத தேர்ச்சி சாதனை படைத்துள்ளது. கணக்கு மற்றும் உயிரியல் பாடப் பிரிவில் மாணவர் நாராயணமூர்த்தி 591 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத்தார். மாணவர் சந்தோஷ் குமார் 590 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார். மாணவர் சுதாகர் 589 மதிப்பெண் பெற்றுள்ளார்.அதே போல் வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாடப்பிரிவில் மாணவிகள் சோபியா ஏஞ்சலின், நித்திய லட்சுமி ஆகியோர் 592 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சாதித்துள்ளனர். இதே பாடப்பிரிவில் மாணவர் பெனாய ராஜப்பன் 591 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.அதே போல் முக்கிய பாடங்களில் 27 பேர் சென்டம் எடுத்து மாவட்ட அளவில் அதிக சென்டம் எடுத்த பள்ளி என்று பெருமை பெற்றுள்ளது. கணக்கு 5, உயிரியல் 4, கம்ப்யூட்டர் சயின்ஸ் 8, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் 6, பொருளியல் மற்றும் கணக்கு பதிவியல் பாடங்களில் தலா 2 என மொத்தம் 27 சென்டம் எடுத்துள்ளனர்.மவுண்ட் பார்க் ஸ்பெஷல் அகாடமி பள்ளியில் தேர்வு எழுதிய அனைவரும் வெற்றி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் பாடவாரியாக நுாறு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தாளாளர் மணிமாறன் பரிசு மற்றும் வெற்றி கோப்பை வழங்கி பாராட்டினார். முதல்வர் கலைச்செல்வி, துணை முதல்வர்கள் முத்துக்குமரன், வினோதினி ஆகியோர் உடனிருந்தனர்.