உள்ளூர் செய்திகள்

உயர்கல்விக்கு உதவும் வழிகாட்டி தினமலர் நாளிதழ் சார்பில் வரும் 26ல் துவக்கம்

கோவை: பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும், வழிகாட்டி நிகழ்ச்சி, தினமலர் நாளிதழ், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில், வரும் 26ம் தேதி துவங்குகிறது.கோவை கொடீசியா அரங்கில், மூன்று நாட்கள் நடக்கும் இந்நிகழ்ச்சியில், புத்தம் புது படிப்புகள், அரசு வேலைவாய்ப்புகள், மருத்துவம், இன்ஜி., தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ஆக்மென்டட் ரியாலிட்டி, சோசியல் மீடியா, டிஜிட்டல் மார்க்கெட்டிங், ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட ஏராளமான பிரிவுகளில், விளக்கம் அளிக்கப்பட உள்ளது.20க்கும் மேற்பட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் நேரடி ஆலோசனை வழங்கவுள்ளனர். முன்னணி பல்கலைகள், உட்பட, 130 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஸ்டால்கள் இடம்பெற உள்ளன. துறை சார்ந்த நிபுணர்கள், பேராசிரியர்களுடன் ஆலோசனை செய்யலாம். படிக்கும் போதே வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.கருத்தரங்கை, தினமலர் நாளிதழுடன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. பக்க பலமாக விளங்குகின்றன ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், அமிர்தா பல்கலை., அசோசியேட் ஸ்பான்சராக ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங், தொழில்நுட்பக் கல்லுாரி உள்ளது.ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரி, கே.எம்.சி.எச்., அண்ட் டாக்டர் என்.ஜி.பி., கல்வி நிறுவனங்கள், கற்பகம் கல்வி நிறுவனங்கள், கோவை எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள், ரத்தினம் குழும கல்வி நிறுவனங்கள், பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, கோவை சி.எம்.எஸ்., கல்வி நிறுவனங்கள், திருப்பூர் கே.எம்.சி., சட்டக்கல்லுாரி, ராஜலட்சுமி தொழில்நுட்பக்கல்லுாரி இணைந்து வழங்குகின்றன.வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், 95667 77833 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு, RGN என்று டைப் செய்து அனுப்பவும். அனுமதி இலவசம். கருத்தரங்கில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்களுக்கு லேப்டாப், டேப், வாட்ச் பரிசாக வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்