தொழில் நுட்ப போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
செஞ்சி: ஸ்ரீரங்க பூபதி பொறியியல் கல்லூரியில் நடந்த தொழில் நுட்ப போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. பொறியியல் கல்லூரிகளுக்கு இடையே மாவட்ட தொழில் நுட்ப போட்டிகளை என்.ஐ.ஐ.டி., சார்பில் நடத்தினர். ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி பொறியியல் கல்லூரி மாணவி வைசாலி இரண்டாமிடமும், மாணவன் தீபக் மூன்றாமிடமும் பெற்றனர். இவர்களுக்கு என்.ஐ.ஐ.டி., சார்பில் காசோலை மற்றும் சான்றிதழ்களை கல்லூரி செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீபதி வழங்கினார். விழாவில் கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.