ரெவேலேஷன் கருத்தரங்கம் - கல்லுாரி மாணவர்களின் விழிப்புணர்வு நடனம்
புதுச்சேரி: ரெவேலேஷன் கருத்தரங்கை வலியுறுத்தி, கடற்கரை சாலையில், கல்லுாரி மாணவர்களின் விழிப்புணர்வு நடனம் நடந்தது. புதுச்சேரி பொறியியல் கல்லுாரி மின்னணுவியல் மற்றும் கருவியியல் துறை சார்பில், செப்டம்பர் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை, ரெவேலேஷன் என்ற பெயரில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட துறை வல்லுனர்கள் பங்கேற்கின்றனர். அதை முன்னிட்டு, கல்லுாரி மாணவிகளின் பிளாஸ் மாப் என்ற பெயரில் விழிப்புணர்வு நடனம் நேற்று முன்தினம் இரவு கடற்கரை சாலையில் நடந்தது. 30 மாணவர்கள் நடனமாடினர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் நடந்த நடன நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டுகளித்தனர். நிகழ்ச்சியில் பேராசிரியர் திருசக்திமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர் செயலாளர் ரகுராம் நன்றி கூறினார்.