அரசு பெண்கள் பள்ளியில் திடக் கழிவு மேலாண்மை குறித்த நிகழ்ச்சி
புதுச்சேரி: வில்லியனுார் கண்ணகி அரசு பெண்கள் பள்ளியில், திடக் கழிவு மேலாண்மை குறித்த நிகழ்ச்சி நடந்தது. நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் நடந்த நிகழ்சிக்கு, பள்ளியின் துணை முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் ஏழிசை நங்கை வரவேற்றார். சிறப்பு விருந்தினராக,கொரவள்ளி மேடு அரசு மேல்நிலைப் பள்ளியின் வரலாற்று விரிவுரையாளர் முத்து அய்யாசாமி கலந்து கொண்டு, காகித கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு பல பயனுள்ள பொருள்களை உருவாக்கம் செய்வது குறித்து, செயல் விளக்கம் அளித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சரவணன் செய்திருந்தார். ஆசிரியை ராஜேஸ்வரி நன்றி கூறினார்.