மருத்துவ படிப்பு உள் ஒதுக்கீடு கவர்னரிடம் நல்ல செய்தி வரும்
சென்னை: &'&'மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு, கவர்னரிடமிருந்து நல்ல செய்தி வரும்,&'&' என, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.தமிழகத்தில் உள்ள, அரசு டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யும், மருத்துவ பணியாளர்கள் நலவாழ்வு சிறப்பு முகாமை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், நேற்று துவக்கி வைத்தார். அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:தமிழகத்தில், மூன்று வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தொற்று அதிகரிக்கும் போது இருந்த கவனம், தற்போதும் இருக்க வேண்டும். பண்டிகை காலத்தில், பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூட வேண்டாம். தொற்று பரவுதலில், காசிமேடு மீன் சந்தை கவலை அளிக்கும் வகையில் உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களில், யாருக்கும் பின்விளைவுகள் ஏற்படவில்லை. மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தை, மற்ற தீர்மானங்களுடன் ஒப்பிட வேண்டாம். இதுகுறித்து, கவர்னரிடமிருந்து நல்ல செய்தி விரைவில் வரும். இவ்வாறு, அவர் கூறினார்.