அரசு பள்ளிக்கு தியாகி பெயர் முதல்வரிடம் கிராம மக்கள் மனு
புதுச்சேரி: மடுகரையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வெங்கடசுப்பா ரெட்டியார் பெயர் வைக்க வேண்டி, விஜயவேணி எம்.எல்.ஏ., தலைமையில் கிராம மக்கள் முதல்வர் நாராயணசாமியிடம் மனு அளித்தனர்.நெட்டப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட மடுகரையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு மடுகரையை சேர்ந்த முன்னாள் முதல்வரும், தியாகியுமான வெங்கட சுப்பா ரெட்டியார் பெயரைச் சூட்ட வேண்டும் என, மடுகரை கிராம மக்கள் விஜயவேணி எம்.எல். ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர்.அதனையொட்டி விஜயவேணி எம்.எல்.ஏ., தலைமையில் மடுகரை கிராம மக்கள் இதுகுறித்து சட்டசபையில் முதல்வர் நாராயணசாமியிடம் மனு அளித்தனர். மனுவினை பெற்றுக் கொண்ட முதல்வர், பள்ளிக்கு பெயர் வைப்பதற்கு பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.