உள்ளூர் செய்திகள்

சீருடை தையல் செலவு: பெற்றோரே ஏற்க கல்வி துறை உத்தரவு

பெங்களூரு: பள்ளி மாணவ - மாணவியருக்கு இரண்டு ஜோடி சீருடைக்கான துணியை மட்டுமே, அரசு வழங்கும். தைக்கும் செலவை பெற்றோரே ஏற்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவின் அரசு பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு அரசு சார்பில், இரண்டு ஜோடி இலவச சீருடை வழங்கப்படுகிறது. இவற்றில் 45 லட்சத்து 45 ஆயிரத்து 749 மாணவர்கள் படிக்கின்றனர். இதுவரை இவர்களுக்கு சீருடையுடன், தைப்பதற்கான செலவையும் அரசு வழங்கியது. ஆனால் இம்முறை துணியை மட்டும் அரசு வழங்கும். தைக்கும் செலவை பெற்றோரே ஏற்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இது பெற்றோருக்கு, சுமையை ஏற்படுத்துகிறது.கல்வித் துறை வெளியிட்ட அறிக்கை:ஆண்டு முழுதும் ஒரே சீருடையை அணிந்து பள்ளிக்கு வர முடியாது. சுகாதாரத்தை மனதில் கொண்டு சில ஆண்டுகளாக வித்யா விகாஸ் திட்டத்தின் கீழ் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இரண்டாவது ஜோடி சீருடை வழங்கப்பட்டது.ஆனால், கொரோனா தொற்றால் 2020 முதல் 2022 வரை இரண்டாவது ஜோடி சீருடை வழங்க முடியவில்லை. 2022 - 23ம் ஆண்டு இரண்டாம் ஜோடி சீருடையை வழங்குவதாக கூறியும், தவிர்க்க முடியாத காரணங்களால் வழங்க முடியவில்லை. துணிகளை வினியோகிக்கும் டெண்டரை, மஹாராஷ்டிராவை சேர்ந்த நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது துணிகள் வினியோகம் துவங்கியுள்ளது. துணிகளை மட்டும் நிறுவனம் வழங்கும். தைப்பதற்கான செலவை, பெற்றோரே ஏற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஒரு ஜோடி சீருடை தைக்க 600 முதல் 700 ரூபாய் செலவாகும் என்பதால், பெற்றோர் விரக்தியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்