உள்ளூர் செய்திகள்

ஓணம் பண்டிகை நாளில் கலந்தாய்வு பகுதி நேர ஆசிரியர்கள் புலம்பல்

கோவை: அரசுபள்ளிகளில் தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட எட்டு பாடங்களுக்கு, பகுதிநேர கலையாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பணியில் சேர்ந்தது முதல், இடமாறுதல் வழங்காததால், பலர் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலையில் இருப்பதாக, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து இவர்களுக்கு, கடந்த மே மாதம் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. காலியிடங்கள் மறைக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும், கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இக்கலந்தாய்வு வரும் 29ம் தேதி நடக்கிறது.ஓணம் பண்டிகையின் போது கலந்தாய்வு அறிவித்ததால், உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் எப்படி பங்கேற்பது என தெரியாமல் புலம்பி வருகின்றனர்.தமிழ்நாடு கலையாசிரியர் நலசங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ஓணம் பண்டிகை கொண்டாடும் ஆசிரியர்கள், உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களால், பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. கலந்தாய்வு தேதியை தள்ளி வைத்தால், ஆசிரியர்கள் பங்கேற்க முடியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்