பாரா மெடிக்கல் டிகிரி படிப்பு கலந்தாய்வு மூலம் சேர அழைப்பு
விக்கிரவாண்டி: பாராமெடிக்கல் டிகிரி படிப்பில் சேர சூர்யா ஸ்கூல் ஆப் பார்மசி கல்லுாரி முதல்வர் அன்பழகன் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:சென்னை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர், தேர்வுக்குழு சார்பில் 2023-2024ம் ஆண்டு பாராமெடிக்கல், டிகிரி படிப்பில் சேர கடந்த மாதம் செப்டம்பர் 11ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஆன்லைன் கலந்தாய்வு நடத்தியது. தற்பொழுது இறுதியாக மாப்-அப் கவுன்சிலிங் தேதி நீட்டித்து மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.அதன்படி அமர்வு அரசு கல்லுாரிகள் மற்றும் சுய நிதி கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 14ம் தேதி முதல் வரும் 17ம் தேதி வரை நீட்டித்துள்ளது. மாணவர்கள் இணையதள வழியாக புதிதாக கலந்தாய்வில் பங்குபெற விரும்புவர்கள் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் உள் நுழைவு செய்து விரும்பிய பாட பிரிவுகளை தேர்வு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.