உள்ளூர் செய்திகள்

அமெரிக்காவில் மூளை சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

வள்ளியூர்: அமெரிக்காவில் மூளை சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.குவைத் நாட்டில் வசிக்கும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள மூலக்காடு கிராமத்தைச் சேர்ந்த சகாய ஜெபாஸ் பிரஜோப் என்ற பிளஸ் 2 மாணவர் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சுற்றுலா சென்றபோது நீரில் மூழ்கி அமெரிக்காவில் கடந்த 4ம் தேதி மூளை சாவு அடைந்தார்.இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் அமெரிக்காவில் தானம் செய்யப்பட்டன. அவரது உடல் விமானத்தில் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள மூலக்காடு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.தமிழக அரசு சார்பில் ஜெபாஸ் பிரஜோப்பின் உடலுக்கு சேரன்மகாதேவி சப் - கலெக்டர் முகமது சபீர் ஆலம்,வள்ளியூர் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, தெற்கு கள்ளிகுளம் அதிசய பனி மாதா ஆலய தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு அவரது உடல் அந்தப் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்