உள்ளூர் செய்திகள்

நான் முதல்வன் திட்ட நிரல் திருவிழா மாணவ வழிநடத்துபவர்களுக்கு பயிற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிரல் திருவிழா குறித்து மாணவர்கள் வழி நடத்துபவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நடந்தது.தமிழகத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிரல் திருவிழா என்கிற ஹேக்கத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள் புத்தாக்க முறையில், புதிய சந்தைப்படுத்தக் கூடிய பொருட்களை உருவாக்குவார்கள்.இந்த நிரல் திருவிழா ஹேக்கத்தான் திட்டத்தில், அனைத்து கல்லுாரிகள் தொழில்நுட்ப கல்லுாரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் போன்ற கல்லுாரிகளில் பயிலும் இளங்கலை மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.விழுப்புரத்தில் இத்திட்டத்தின் முதல் கட்டமாக, கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள், தொழில் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று, பிரச்னைகள் கண்டறியும் கருத்தரங்கம் நவம்பர் 7 முதல் 14ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில், சில பொது பிரச்னைகளுக்கு, புத்தாக்கத்தின் மூலம் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்கள் தீர்வு காண்பதற்கு வழிகாட்டப்பட்டது.இந்நிகழ்வின் அடுத்த கட்டமாக, நிரல் திருவிழா ஹேக்கத்தான் திட்டத்தில் பங்கு பெறும், கல்வி நிறுவன மாணவர்களை வழிநடத்தும் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, நேற்று, ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், வழிநடத்துபவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் நடராஜன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அருள், பயிற்றுநர்கள் கோபால்சாமி, சரவண சுப்ரமணியன் ஆகியோர் பயிற்சியை துவக்கி வைத்து பேசினர். விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 71 கல்வி நிறுவன மாணவ வழிநடத்துனர்கள் பயிற்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்