உள்ளூர் செய்திகள்

பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு புது கட்டடம்: சுகாதார துறை உத்தரவு

கோவை: இடியும் நிலையில் உள்ள பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கான விடுதியை, புதிதாக கட்ட உத்தரவிடப்பட்டது.கோவை அரசு மருத்துவக் கல்லுாரியில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பயில்கின்றனர். மருத்துவ படிப்பு முடியும் தருவாயில், மாணவர்கள், ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி(சி.ஆர்.ஆர்.ஐ.,) பெறுவது கட்டாயம்.மருத்துவமனையிலேயே சி.ஆர்.ஆர்.ஐ., மாணவர்கள் தங்கி, பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கான விடுதி, மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டம், 1974ம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது.ஏறக்குறைய, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இவ்விடுதி, முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. இதையடுத்து, இக்கட்டம் மாணவர்கள் தங்க தகுதியற்றது என, பொதுப்பணித்துறை சான்றிதழ் அளித்தது. இதற்கு மாற்றாக, புதிய கட்டடம் கட்ட மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.தற்போது, புதிய கட்டடம் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்த, சுகாதார துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி, உடனடியாக பழைய கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட அனுமதி வழங்கினார். இதன் வாயிலாக, மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்