உள்ளூர் செய்திகள்

பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது தமிழக நிதித்துறை செயலாளர் சொல்கிறார்

சென்னை: தமிழகத்தில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. இது தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது என நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.பட்ஜெட் குறித்து நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் அளித்த விளக்கம்: தமிழகத்தில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. இது தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. தமிழக பொருளாதாரம் ஆரோக்கியமாக உள்ளது. இயற்கை பேரிடர்களால் தமிழகத்தின் வருவாய் குறைந்துள்ளது. நிவாரணத் தொகைக்காகவே அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுத்துறை வருமானம் கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு இல்லை.மத்திய அரசின் நிதி பகிர்வு, மானியம் குறைந்து கொண்டே வருகிறது 10வது நிதிக்குழுவின் போது 6.64 சதவீதமாக இருந்த நிதிபகிர்வு 15வது நிதிக்குழுவில் 4.08 சதவீதமாக குறைந்துள்ளது. வரி திரட்டுவதற்கான முயற்சிகளை கவனமாக கையாண்டு வருகிறோம். மோட்டார் வாகனம் மூலம் கிடைக்கும் வரி வருவாய் திருப்திகரமாக உள்ளது.இந்தாண்டு 15 சதவீதம் வணிக வரியில் வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழக இளைஞர்களின் பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதற்காக போட்டி தேர்வு பயிற்சிக்காக ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்